நாகமலைபுதுக்கோட்டை: மதுரை, நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள, நான்கு வழிச்சாலை அருகே, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், 35 வயது பெண் கொலை செய்யப்பட்டார்.தட்டானூர் நான்கு வழிச்சாலை அருகே, வேலு என்பவர் தார் ஆலை அமைத்து வருகிறார். இங்கு ஆறுமுகம் என்பவர் காவலராக உள்ளார். நேற்று மாலை 3.30 மணிக்கு, ஆறுமுகம் வந்த போது, அங்கு பெண் பிணம் கிடந்தது. கழுத்தை அறுத்தும், தலையில் வெட்டியும், முகத்தில் கல்லை போட்டு சிதைக்கப்பட்டு இருந்தது.தடயவியல் நிபுணர் மீனாட்சி தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்தனர். இறந்த பெண்ணின் வலது கையில் "வி.ராமமூர்த்தி' என பச்சை குத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் யார் என்பது குறித்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,ராஜா விசாரிக்கின்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.