திருமங்கலம்: திருமங்கலம் அருகே வீட்டு வாசலில், ஆசிரியையிடம், 14 பவுன் நகையை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றனர்.திருமங்கலம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சார்லெட், 40. திருமங்கலம் கணபதி நகரில் வசிக்கிறார். நேற்று மாலை, பள்ளி முடிந்து வந்த அவர், கைப்பையில் வைத்திருந்த வீட்டு சாவியை எடுப்பதற்காக கீழே குனிந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த நபர், சார்லெட்டின் 14 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு ஓடினான். அவனுடன் வந்த மற்றொரு நபர், தெரு முனையில், இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்தான். அதில் ஏறி இருவரும் தப்பிச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.