பேரையூர்: பேரையூரில் மணல் கடத்திய டிராக்டரை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ., மற்றும் போலீஸ்காரரை, டிராக்டரால் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்,25. இவருக்கு சொந்தமான டிராக்டரில், சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைக்கு பின் உள்ள ஓடையில் மணல் கடத்தினார். தகவல் அறிந்து, பேரையூர் வி.ஏ.ஓ., சுந்தரபெருமாள், போலீஸ்காரர் முத்துகிருஷ்ணன் மற்றும் 2 தலையாரிகள், கோடீஸ்வரனை மறித்தனர்.டிராக்டரை நிறுத்தாமல், அவர்கள் மீது மோதும் வகையில் ஓட்டிச் சென்று தப்பினார். பின், விரட்டிச் சென்று கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.தொடரும் கொள்ளை: பேரையூர் பகுதியில், பல ஆண்டுகளாக டிராக்டர் மூலம் மணல் திருடுவது தொடர்கிறது. வருவாய் துறை மற்றும் போலீசார்
கண்டுகொள்வதில்லை. தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இணைந்து மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், ஆத்திரமடையும் டிராக்டர் உரிமையாளர்கள் சிலர், மிரட்டும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, பாலகிருஷ்ணன் எஸ்.பி.. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.