திருப்பரங்குன்றம்: ""எதிர்காலத்தில் மொபைல் போன்மூலம் கல்வி கற்கும் தொழில்நுட்பம், கல்வித்துறையில் மிக முக்கிய இடம் வகிக்கும்'' என, மதுரை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ராஜம் பேசினார்.தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், "மொபைல் போன் கல்வி' என்ற தலைப்பில் நடந்த தேசிய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் அபய்குமார் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜம் : வகுப்பறை கல்விமுறையில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இது எதிர்காலத்தில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதற்கு மொபைல் கல்விதான் ஈடுகொடுக்கும். இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தால், மாணவர்கள் தேர்வு எழுதவும், நேர்முகத்தேர்விற்கு செல்லும்போதும்கூட மொபைல் போனில் படித்துக் கொண்டே செல்லலாம்,
என்றார்.இக்கல்லூரி துறை தலைவர்கள் ராஜூ, மெர்சி ஷாலினி, பேராசிரியர் மன்சூர் ரூமி ஆகியோர், "சி-டாக்' குழுவுடன் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு, மொபைல் போன்மூலம் கல்வி கற்பித்தல், கற்றல் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.