"ஒரு போன் போதுமே' வாசகர்களின் புகார்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"ஒரு போன் போதுமே' வாசகர்களின் புகார்கள்

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆபத்தான பள்ளம் மதுரை தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே, ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. மழை நீர் தேங்கியுள்ளது. வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர்.-பி.ராணி, தெப்பக்குளம்.மாடுகளால் தொல்லைமதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி ரோட்டில், மாலையில் பள்ளிகள் முடியும் நேரங்களில், மாடுகளை கட்டிவைத்து பால் கறக்கின்றனர். அவ்வழியாகச் செல்வோரை மாடுகள் முட்டுகின்றன. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.ஹாஜி அலி, ஜெய்ஹிந்த்புரம்.ரோடு மோசம் மதுரை வசந்தநகர் முதல் தெரு ரோடு மிக மோசமாக உள்ளது. நடந்துச் செல்ல முடியவில்லை. விபத்து ஏற்படுகிறது. மேயரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.-எம்.கந்தன், வசந்தநகர்.மின்வயரால் ஆபத்துமதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் பழைய முருகன் தியேட்டர் மெயின் ரோட்டில், மின் கம்பத்திலிருந்து (10 முதல் 11 வரை) வயர் மிக தாழ்வாக தொங்குகிறது. உதவி பொறியாளரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படும் முன், மின்வாரியம் சரி செய்ய வேண்டும்.-வி.ஸ்ரீராமுலு, திருவள்ளுவர்நகர். எரியாத தெருவிளக்கு மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 2 வது தெருவில், தெருவிளக்கு (எப் 35) எரியவில்லை. இதனால், இரவில் அடிக்கடி நகைபறிப்பு நடக்கிறது. இதை தடுக்க, தெருவிளக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். -ஜி.அலெக்சாண்டர், நாவலர்நகர். தடுப்புகள் தேவை மதுரை விளக்குத்தூண்-காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவில்வரை, நடுவில் தடுப்புகள் அமைத்திருந்தனர். தற்போது அகற்றிவிட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அபாயமும் உள்ளது. மீண்டும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.-கே.சிவா, சந்தைப்பேட்டை. குடிநீரில்
க்கடை மதுரை தெற்குவாசல் தெற்குபெருமாள் மேஸ்திரி வீதியில், ஒருவாரமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-என்.சித்ரா, தெற்குவாசல். உப்புத்தண்ணீர் வரவில்லைமதுரை ரிசர்வ் லைன், விஸ்வநாதபுரம் குதிரைப்படை லயனில் ஆழ்குழாய் மோட்டாரில் 3 மாதங்களாக தண்ணீர் வரவில்லை. மக்கள் சிரமப்படுகின்றனர். மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.-கார்த்திக், ரிசர்வ் லைன்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை