துறையூர்:
செக் மோசடி வழக்கில் பெண் லாரி உரிமையாளருக்கு ஒன்றரை ஆண்டு சிறை
தண்டனையும், ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, துறையூர் குற்றவியல்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
துறையூர் அருகே வெங்கடேசபுரத்தைச்
சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 38. இவரிடம் லாரி உரிமையாளரான
செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த ரெங்கராஜ் மனைவி ராஜம்மாள், 32, ஒன்றரை லட்ச
ரூபாய் கடன் பெற்று, அதற்கு ஈடாக வங்கி செக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில்
ராஜம்மாள் வழங்கிய செக்குக்கு, சம்மந்தப்பட்ட வங்கி தொகை வழங்க
மறுத்துவிட்டது. இதனால், 2009ம் ஆண்டு தட்சிணாமூர்த்தி, ராஜம்மாள் மீது
செக்மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த துறையூர் குற்றவியல்
துறை நடுவர் நீதிமன்ற நடுவர் எழில்வேலவன், ராஜம்மாளுக்கு, ஒன்றரை ஆண்டு
சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.