திருச்சி:
அ.தி.மு.க., சார்பில், தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிக்கும், தி.மு.க.,
அங்கம் வகிக்கும் மத்திய அரசை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் அறிக்கை:
தமிழக
முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புப்படி, விலைவாசி உயர்வுக்கு வித்திடும்
வகையில், தவறான பொருளாதாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய
கொள்கைகளை கடைபிடித்து வருவதோடு, ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும்,
தி.மு.க., அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து,
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், திருச்சி ஜங்ஷன் காதிகிராஃப்ட்
அருகில், ஃபிப்., 22ம் தேதி காலை, 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில்
அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் ராஜய்யன் தலைமை வகிக்கிறார். அண்ணா
தொழிற்சங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகிக்கிறார். அண்ணா
தொழிற்சங்க புறநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், போக்குவரத்துக்கழ திருச்சி
மண்டல செயலாளர் நாகராஜ் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
எனவே, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மேயர், துணைமேயர், முன்னாள் அமைச்சர்கள் என, கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.