துறையூர்:
புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி விளையாட்டு தினவிழாவில், போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
திருச்சி
மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா
நடந்தது. விழாவில் பங்கேற்றோரை கல்லூரி முதல்வர் இராமசாமி வரவேற்று
பேசினார். கல்லூரிக்குழுத் தலைவர் பொன்னம்பலம், உறுப்பினர் சிவனேஸ்வரி
முன்னிலை வகித்து, வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி முகமைக்குழு தலைவர்
பாலசுப்ரமணியன் தலைமை உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலை உடற்கல்வி துறை
உதவிப்பேராசிரியர் காளிதாசன் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு பரிசும், உடற்கல்வி ஊக்கத் தொகையாக, 40 ஆயிரம்
ரூபாயும் வழங்கப்பட்டது. சந்திரன், மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்,
அஜய்குமார், இரண்டாமாண்டு பொருளியல், வித்யா, இரண்டாமாண்டு இளங்கலை கணிதம்
ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
விழாவின் நிறைவாக உதவி
உடற்கல்வி இயக்குனர் அறிவழகன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் உடற்கல்வி இயக்குனர் சகாயலதாராணி செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.