மண்ணச்சநல்லூர்:
அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பிடம் பெற்று, வெற்றிபெற வேண்டி,
உத்தமர் கோவிலில் நடந்த சிறப்பு சரஸ்வதி ஹோமத்தில், திரளான மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர்.
முப்பெரும் தேவர்களும், முப்பெரும் தேவியர்களும்
எழுந்தருளியுள்ள சிறப்பு பெற்ற திருத்தலம் உத்தமர் கோவில். இக்கோவிலில்
கல்வி கடவுளாக சிறப்பித்து கூறப்படும் சரஸ்வதி தேவி, தனி சன்னதியில் குடி
கொண்டு அருள்பாலித்து வருகிறார். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,
மாணவிகளின் நலன்கருதி, ஆண்டுதோறும் உத்தமர் கோவிலில், சரஸ்வதி ஹோமம் நடந்து
வருகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், கல்விக் கடவுள்
சரஸ்வதி தேவியின் அருள்பெற்று தேர்வில் சிறப்பிடம் பெறுவார்கள் என்பது
நம்பிக்கை.
சரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஹோமம் உத்தமர்கோவிலில் நடந்தது.
காலை முதல் மதியம் வரை நடந்த ஹோமத்தில், எஸ்.எல். எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை
கோவில் தக்காரும், உதவி கமிஷனருமான தங்கமுத்து ஆலோசனைப்படி, கோவில் செயல்
அலுவலர் சந்திரசேகரன், கணக்கர் சாய் வெங்கடசுப்ரமணியன் மற்றும் கோவில்
அலுவலர்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.