Advertisement
ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
04:03

திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
இதுகுறித்து அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான சிவபதி வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 65வது பிறந்தநாளை முன்னிட்டு, ஃபிப்., 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, புறநகர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்கள், நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
ஃபிப்., 24ம் தேதி, துறையூரில் எம்.பி., இளவரசன் பங்கேற்கிறார். மணப்பாறையில், இடிமுழக்கம் ஆதவன் இளங்கோ பங்கேற்கிறார். 25ம் தேதி, வையம்பட்டி, தொட்டியம், மணப்பாறை, 26ம் தேதி துவாக்குடி, மருங்காபுரி, உப்பிலியபுரம், 27ம் தேதி திருவெறும்பூர், புள்ளம்பாடி, லால்குடியில், முன்னாள் அமைச்சர் பாலசுப்பிரமணியன் பங்கேற்கிறார். 28ம் தேதி முசிறியில் கொள்கைப்பரப்பு துணை செயலாளர் நாஞ்சில்சம்பத், அமைச்சர் சிவபதி, விழுப்புரம் செல்வராஜ் பங்கேற்கின்றனர். 28ம் தேதி மண்ணச்சநல்லூர், தா.பேட்டை, துறையூரில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி பங்கேற்கிறார். மேற்கண்ட கூட்டங்கள் அனைத்தும் மாலை, ஆறு மணிக்கு நடக்கிறது.
பொதுக்கூட்டத்தில் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.
* மருத்துவ முகாம்: அமைச்சர் சிவபதியின் மற்றொரு அறிக்கையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் தொகுதி சார்பில், அப்போலோ மருத்துவமனை குழுமத்துடன் இணைந்து, மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம், 24ம் தேதி, காலை, 7 மணியிலிருந்து, மாலை, 3 மணி வரை, ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்' என, தெரிவிக்கப்மாற்றாந்தாய் மனப்பான்மையில்
மத்திய அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு
தா.பேட்டை: ""மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்க மறுத்து வருகிறது,'' என்று அமைச்சர் சிவபதி பேசினார்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை சிட்டிலரை பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் விழா நடந்தது. தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார். ஆர்.டி.ஓ., முஸ்தபா கமால் பாட்ஷா, பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா, யூனியன் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் செங்கமலை, மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், நெடுமாறன் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமை வகித்து, 876 பேருக்கு, 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற சீரிய எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும். மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்க மறுத்து, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.