வேதாரண்யம்: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டதையடுத்து, விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ., காமராஜ் தலைமையில் அ.தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கினர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் தாணிக்கோட்டகம், மருதூர் மூலக்கரை, தலைஞாயிறு யூனியனைச் சேர்ந்த உம்பளச்சேரி கிராமங்களில், விவசாயிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., காமராஜ் இனிப்பு வழங்கினார். ஆங்காங்கே அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் வேதையன், குஞ்சாலி மரைக்காயர், கலைவாணி, யூனியன் கவுன்சிலர் சுப்பிரமணியன், தலைஞாயிறு பஞ்., யூனியன் தலைவர் தமிழ்வாணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெ., பேரவை இணை செயலாளர் வீரமணி, நகர துணை செயலாளர் துர்காமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.