கந்தர்வக்கோட்டை:
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வட்டார வளமையம்
சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் நடந்தது.
புதுக்கோட்டை
மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
அமைச்சகத்தின் உதவியுடன், ஆர்.டி.எஸ்., தொண்டு நிறுவனம், வட்டார வள மையம்,
அமைதி அறக்கட்டளை ஆகியவை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடந்தது. முன்னதாக, மத்திய கூட்டுறவு வங்கி முன் துவங்கிய பேரணியை,
பஞ்சாயத்து யூனியன் சேர்மன் சின்னப்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுகை
ரோடு காந்தி சிலை, பெரியகடைத்தெரு, மாரியம்மன் கோவில் வழியாக,
ஆர்.டி.எஸ்., தொண்டு நிறுவன வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில்,
300க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழு பெண்கள் பங்கேற்று, விழிப்புணர்வு
அட்டையை ஏந்தி சென்றனர். உயிரினங்களை கொல்லக்கூடாது, பாரம்பரிய மூலிகைகளை
பாதுகாப்போம், மரங்களை வெட்டாதே என, பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
முடிவில்
ஆர்.டி.எஸ்., வளாகத்தில் கருத்தரங்கம் நடந்தது. இதில், புதுகை தமிழ்நாடு
அறிவியல் ஆராய்ச்சிக்கழக இயக்குனர் விஜயகுமார், ஆர்.டி.எஸ்.., நிறுவன
தலைவர் கார்த்திகேயன், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ரஹீம்,
யூனியன் கவுன்சிலர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.