வேதாரண்யம்: அம்மன் கோவில்
உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து, ரொக்கம், நகையை கொள்ளையடித்த சம்பவம்,
பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம், வேதாரண்யம்
அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் உட்புறத்தில் எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல, பூஜை, வழிபாடு செய்வதற்கு கோவிலுக்கு பூசாரி சேகர் வந்தார்.
அப்போது கோவில் முன்புறம் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து
அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள்
கோவிலுக்குள் நுழைந்து, உண்டியலை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து,
கோவில் நிர்வாகி கார்த்திகேயன் வாய்மேடு போலீஸில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில், வாய்மேடு (பொ) இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் மற்றும் போலீஸார்
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் உண்டியலில், 35 ஆயிரம்
மதிப்புள்ள பணம், நகை இருந்தது என, கோவில் நிர்வாகம் சார்பில்
கொடுக்கப்பட்ட புகார் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.