தஞ்சாவூர்:
"அரசு அலுவலர்களிடம் பிடித்தம் செய்யும் தொழில் வரியை ரத்து செய்ய
வேண்டும்' என, தமிழக அரசை வலியுறுத்தி, வருவாய்த்துறை உதவியாளர்கள்
சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக
உதவியாளர் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. இதில்
மாவட்ட செயலாளர் துரைராஜ் வரவேற்றார். மாவட்டத்தலைவர் சீனிவாசன் தலைமை
வகித்தார். அரசு அலுவலர் கழக மாவட்ட செயலாளர் தரும கருணாநிதி, சங்க
முன்னாள் நிர்வாகி பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
இதில் அரசு
திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பணியாற்றும்
வருவாய்த்துறையினருக்கு, வீட்டுவசதி வாரியத்தின்கீழ் நிரந்தர வீடு ஒதுக்க
வேண்டும். எந்த தொழிலும் செய்யாத அரசு அலுவலர்களிடம் பிடித்தம்
செய்யப்படும் தொழில் வரியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பறிட,
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் சங்க பொருளாளர் சாமிநாதன் நன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.