தஞ்சாவூர்: இந்திய மாதர் தேசிய சம்மேளன ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சையில்
இந்திய மாதர் தேசிய சம்மேளன, தஞ்சை மாவட்டக்குழு நிர்வாகிகள்
ஆலோசனைக்கூட்டம், கீழவீதி ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது. இதில்,
நிர்வாகி ஆரோக்கியமேரி தலைமை வகித்தார். மாதர் சம்மேளன மாநில துணை செயலாளர்
மாலா, மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்
விஜயலட்சுமி ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் ஸ்ரீதேவி, ஜானகி, சகுந்தா,
பானுமதி, தவமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெண்களுக்கு
எதிராக நடந்து வரும் பாலியல் கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை
நிலைநிறுத்துவது, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில், 33 சதவீத
இடஒதுக்கீட்டை வலியுறுத்துவது, சாதிய மோதல்களை தடுக்க அரசை நடவடிக்கை
எடுக்க கோருவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும்
பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு கோரி, மதுரையில் அடுத்த மாதம், ஐந்தாம்
தேதி நடக்கும் மகளிர் தின மாநில பேரணியில், தஞ்சை மாதர்
சம்மேளனத்திலிருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், 400 பேர் பங்கேற்பது,
தஞ்சை மருத்துவக்கல்லூரி உள்பட தாலுகா அரசு மருத்துவமனைகளிலுள்ள
குறைபாடுகளை களைய, தமிழக அரசை வலியுறுத்துவது, விலைவாசி உயர்வை
கட்டுப்படுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பது என்பது
உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாகி பிரியா
நன்றி கூறினார்.