தஞ்சாவூர்:
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த வழக்கில் லோடுமேன்கள் மீது வழக்குப்பதிவு
செய்யாமல் இருக்க, 8,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை, லஞ்ச ஒழிப்பு போலீஸார்
கைது செய்தனர்.
தஞ்சாவூர் பள்ளி அக்கரஹாரம், வெண்ணாற்றங்கரை சேர்ந்தவர்
ரமேஷ்பாபு, 41. இவரது மனைவி ஷீலா. இவருக்கு சொந்தமான லாரி உள்ளது. கடந்த,
15ம் தேதி டிரைவர் அகஸ்டின், மலட்டூர் அடுத்த கொத்தங்குடி ஆற்றில் மணல்
ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி வந்தார். வெண்ணுகுடி அருகே மலட்டூர் போலீஸ்
எஸ்.ஐ., சுகுமார் லாரியை மறித்தார்.
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததாக,
லாரி உரிமையாளர் ஷீலா, டிரைவர் அகஸ்டின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு
செய்தார். தொடர்ந்த லாரியில் லோடுமேன்கள் நடராஜன், பொன்னையன், ஜோதிகுமார்,
கலியமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
ரமேஷ்பாபு, "என் வீட்டுக்கு தான் மணல்
எடுத்து வந்தேன். அவர்களுக்கு எதுவும் தெரியாது. லோடுமேன்களை
விட்டுவிடுங்கள்' என்று, எஸ்.ஐ., சுகுமாரிடம் கெஞ்சியுள்ளார். "நான்
செல்லும் போது அவர்களை அழைத்து வாருங்கள்' என, சுகுமார் கூறினார். அவர்கள்
மீது வழக்குப்பதிவு செய்யாமல் விடுவிக்க தலா, 2,000 ரூபாய் வீதம், 8,000
ரூபாய் லஞ்சம் தரும்படி, எஸ்.ஐ., சுகுமார் கேட்டுள்ளார்.
ரமேஷ்பாபு,
தஞ்சை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சிலம்பரசனிடம் இதுபற்றி புகார் அளித்தார்.
சிலம்பரசன் தலைமையிலான போலீஸார், ரமேஷ்பாபுவிடம் ரசாயனம் தடவிய பணத்தை
கொடுத்தனுப்பினர். ரமேஷ்பாபு, எஸ்.ஐ., சுகுமாரிடம் பணத்தை கொடுத்தார். அதை
எஸ்.ஐ., வாங்கியதும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக
ஸ்டேஷனுக்குள் நுழைத்து, எஸ்.ஐ., சுகுமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
அவரை
கைது செய்த போலீஸார், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு தனி நீதிபதி ஸ்ரீதர்
முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.