தஞ்சாவூர்:
தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டாது நாளாக நடந்த வேலை நிறுத்த
போராட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ரயில் மறியல், 12
இடங்களில் பஸ் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட, 73 பெண்கள் உட்பட, 519 பேர்
கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள்
சார்பில், பொது வேலை நிறுத்தப் போராட்டம், இரண்டாவது நாளாக நேற்று நடந்தது.
நேற்று காலை தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் காலை, 10.25 மணிக்கு வந்த சோழன்
எக்ஸ்பிரஸ் ரயிலை, மா.கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில
துணைத்தலைவர் முகமது அலி தலைமையில், மறியலில் ஈடுபட்ட , 73 பேர் கைது
செய்யப்பட்டனர்.
பழைய பஸ்ஸ்டாண்ட் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர்
சந்திரகுமார் தலைமையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொ.மு.ச., மாவட்ட
செயலளர் சேவியர், சி.ஐ.டி.யு., முருகன் உள்ளிட்ட, 40 பேர் கைது
செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வங்கிகள், பொதுத்துறை
காப்பீட்டு நிறுவனங்கள், வருமான வரி அலுவலகங்கள், ஊழியர்கள் வராததால்
வெறிச்சோடிக் காணப்பட்டன. மாநில அரசு அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள்
பணிக்கு வந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வழக்கம்போல் ஆட்டோக்கள், அரசு பஸ்கள்
இயங்கின.
* திருவாரூர் ரயில்வே ஸ்டேஷனில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர்
பழனிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி
ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில், 46 பேர் கைது
செய்யப்பட்டனர். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள மாவூர்
கடைத்தெருவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் இடும்பையன் தலைமையில் நடந்த
சாலை மறியல் போராட்டத்தில், 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல்
மாவட்டம் முழுவதும், மத்திய தொழிற்சங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் சார்பில் ஆறு இடங்களில் நடந்த சாலை மறியல்
போராட்டத்தில், 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொழிற்
சங்கங்களின் இரண்டு நாள் போராட்டத்தால், மாவட்ட முழுவதும் சி.ஐ.டி.யு.,
ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோக்கள் முழுமையாக ஓட வில்லை.
தேசிய வங்கிகள் முழுமையாக இயங்கவில்லை. கரூர் வைசியா போன்ற ஒரு சில தனியார்
வங்கிகளும் நேற்றும் செயல்படவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.
மாநில
அரசு அலுவலகங்களில், 50 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர். மத்திய அரசு
அலுவலகங்களில், 10 சதவீதம் பேரே பணிக்கு வந்திருந்தனர். திருவாரூர்
பகுதியில் ரேஷன் கடைகள், இரண்டாவது நாளாக நேற்றும் இயங்கவில்லை. இதனால்,
பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
* திருத்துறைப்பூண்டி புதிய பஸ்ஸ்டாண்ட்
அருகே சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமியப்பன் ஆகியோர் தலைமையில், சாலை
மறியல் போராட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர்
நாகராஜன் உட்பட, 30 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால், ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.