வாழப்பாடி: வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியானார். வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளைவலசு பஞ்சாயத்து, பள்ளத்தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரத்தினவேல், 45. அவருக்கு, சுந்தரம்மாள், 35, என்ற மனைவி, கண்ணன், 11, என்ற மகனும், லத்திகா, 8, என்ற மகளும் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால், வீட்டில் இருந்து, "டி.வி.எஸ்.,50' மொபட்டில், வாழப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சென்ற ரத்தினவேல், சிகிச்சை பெற்றுக்கொண்டு, பேளூர் வழியாக, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அயோத்தியாப்பட்டணம்-பேளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வேட்டைக்காரனூர் பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது. விபத்தில், விவசாயி ரத்தினவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.