சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே பி.நாட்டாமங்கலம், செட்ட்டியார் நாட்டாமங்கலம், தம்மநாயக்கன்பட்டி, கொழிஞ்சிப்பட்டி உள்ளது. இந்த பகுதியில், 4,000 பொதுமக்கள் வசிக்கின்றனர். பி.நாட்டாமங்கலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கொண்டலாம்பட்டிக்கு வேலைக்காகவும், குழந்தைகள் பள்ளிக்கும் வந்து செல்கின்றனர். மூன்றடி தடத்தில், கரடுமுரடான பாதையில், ரயில் தண்டவாளத்தை கடந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக பாதை வசதியில்லாமல் தவித்து வந்த மக்கள், பி.நாட்டாமங்கலத்தில் இருந்து கொண்டலாம்பட்டி வரையிலான வழிதடத்தை அகலப்படுத்தி, தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும், ரயில்வே கிராஸிங் அமைக்க வேண்டும் என, கலெக்டர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். ரயில்வே கிராஸிங், பாதை வசதி கேட்டு கலெக்டரிடம் முறையிட்டும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று, கொண்டலாம்பட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பி.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் நிறைவேற்றி கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.