மேட்டூர்: தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று கர்நாடகாவில் உள்ள ஸ்ரீமலை எனப்படும் மாதேஸ்வரன்மலை வரை இயக்கப்பட்டது. மத்திய அரசை கண்டித்து நேற்று இரண்டாவது நாளாக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டது. ஸ்டிரைக் காரணமாக கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சேலம் மற்றும் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன்மலை, கொள்ளேகால், மைசூருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 17 பஸ்கள் இயக்கப்படுகிறது. கர்நாடகா ஸ்டிரைக் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன்மலை, மைசூரு, கொள்ளேகால் ஆகிய இடங்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், தமிழக-கர்நாடகா எல்லை கிராம மக்கள் ஆட்டோ, வேன்களில் தங்கள் கிராமங்களுக்கு சென்றனர். ஸ்டிரைக் காரணமாக எல்லை கிராம மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இரண்டாவது நாளான நேற்று ஸ்டிரைக் நீடித்த போதிலும், நேற்று காலை முதல் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன்மலை வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பயணிகள் மாதேஸ்வரன்மலை வரை சென்று, அங்கிருந்து வேறு வாகனங்களில் கொள்ளேகால், மைசூரூ, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.