சேலம்:
தங்கை காணாமல் போனதாக புகார் கொடுக்கச் சென்ற கட்டிட தொழிலாளியை, போலீஸார்
தாக்கியதில், தொழிலாளி பலத்த காயமடைந்தார். சேலம் அருகே உள்ள
தீவட்டிப்பட்டி நல்லூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனிசாமி, 27.
இவரது சித்தி மகள் மாயாவதி, 19, கடந்த, 14ம் தேதி வீட்டில் இருந்து காணாமல்
போனார். தங்கை காணாமல் போனது குறித்து, பழனிசாமி, தீவட்டிப்பட்டி போலீஸ்
ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றுள்ளார். இரண்டு நாட்கள் பெண்ணை தேடி
பார்த்து விட்டு, கண்டு பிடிக்க முடியாவிட்டால் புகார் கொடுக்குமாறு,
போலீஸார் பழனிசாமியை திருப்பி அனுப்பி விட்டனர்.
மாயாவதியை கண்டு
பிடிக்காத நிலையில், கடந்த, 17ம் தேதி புகார் கொடுக்க, மீண்டும்
தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பழனிசாமி சென்றுள்ளார். இன்ஸ்பெக்டர்
வெளியில் சென்று இருப்பதாகவும், பின்னர் வருமாறும் போலீஸார் கூறியுள்ளனர்.
இதே போல், புகாரை வாங்காமல், போலீஸார் பலமுறை அலைகழித்துள்ளனர்.
இந்நிலையில், பழனிசாமி பலத்த காயத்துடன், சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும்
எஸ்.ஐ., முன்னிலையில், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த, மூன்று போலீஸார்
கடுமையாக தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
என்று தெரிவித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில், கட்டிட
தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து
வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.