Advertisement
பெண்களை அரிவாளால் வெட்டிய இருவர் கைது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
04:40

இடைப்பாடி: இடைப்பாடி அருகே நிலத்தகராறு சம்மந்தமாக இருபெண்களை அறிவாளால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஒருவரை போலீஸார் தேடி. வருகிறார்கள்.
இடைப்பாடி அருகே வேப்பமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. அவர், தனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தை, அவரது உறவினரான குருசாமி என்பவருக்கு, மூன்று ஆண்டு குத்தகைக்காக கொடுத்து, அதற்காக, ஏழு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தும், குருசாமி விவசாய நிலைத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். அதனால், இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று, மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, குப்புசாமியின் மனைவி குப்பாயி, 65, அவரது மருமகள் அம்பிகா, 42, ஆகிய இருவரையும், குருசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் சண்முகம் ஆகியோர் அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த குப்பாயி, அம்பிகா ஆகிய இருவரும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸார், குருசாமி, 65, அவரது மகன் சண்முகம், 36, ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான பாப்பாத்தியை தேடி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.