வாழப்பாடி:
வாழப்பாடி அருகே பைக் மோதிய விபத்தில், சின்னசேலத்தை சேர்ந்த விவசாயி
பரிதாபமாக உயிரிழந்தார். வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை
சங்கத்தில், நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்துக்கு, விழுப்புரம்
மாவட்டம் சின்னசேலம் அடுத்த தென்செட்டியேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி
சின்னையன், 65, என்பவர், பருத்தி மூட்டைகளை, விற்பனைக்கு கொண்டு வந்தார்.
பருத்தி
மூட்டைகளை எடை போடுவதற்கு தாமதம் ஏற்பட்டதால், நேற்று இரவு, 7 மணியளவில்,
சிறுநீர் கழிப்பதற்காக, சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையை கடந்து
சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த, "ஹோண்டா யுனிகார்ன்' பைக், விவசாயி
மீது மோதியது. விபத்தில், படுகாயமடைந்த விவசாயி சின்னையன், சேலம் அரசு
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில்
உயிரிழந்தார். விபத்து குறித்து, வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து,
விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டி வந்த, சேலம் அமானி கொண்டாலாம்பட்டியை
சேர்ந்த மணிமாறன், 24, என்ற வாலிபரை கைது செய்து விசாரனை நடத்தி
வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.