சேலம்: சேலம் சின்னகொல்லப்பட்டியில், ஏழு குடிசை வீடுகளில் அடுத்தடுத்து தீ பிடித்ததால், பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேலம், பெரிய கொல்லப்பட்டி, புது காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடிசை வீட்டில், நேற்று இரவு, பலமான காற்று வீசியதால், மின் ஒயர் மூலம் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது. தீயை அணைப்பதற்கு முன்பு, அருகில் வசித்து வந்த அண்ணாமலை, முருகேசன், ராஜேஸ் கண்ணன், சுப்ரமணி உள்ளிட்ட ஏழு குடிசைகளில், அடுத்தடுத்து தீ பரவியது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய கோட்ட அலுவலர் எழிரசு தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், வீடுகளில் இருந்த, பைக், மிக்ஸி, "டிவி' உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.