சேலம்: சேலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ., முதல்வர் ராஜகோபாலன் வெளியிட்ட அறிக்கை: சேலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில், இலவச தொழிற்பயிற்சிக்கான நேரடி சேர்க்கை, இன்றுடன் நிறைவடைகிறது. ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மகளிருக்கு, உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையிலான பயிற்சிகள் உள்ளன. ஆறு மாதம் வரவேற்புக்கூட அலுவலக உதவியாளர் தொழிற்பிரிவில் காலியிடங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது. ப்ளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், கட்டணம் செலுத்த இயலாத இலவச கல்வி பெற விரும்பும் ஏழை, எளிய மகளிர் திருமணமான பெண்கள், கல்லூரி பெண்கள் ஆகியோருக்கு, மாதந்தோறும், 500 உதவித்தொகையுடன், அகில இந்திய அளவில், மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய தொழிற் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. வயது வரம்பு கிடையாது. இலவச ரயில் பாஸ் வசதி, சைக்கிள் ஆகியவை, தமிழக அரசால் வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 0427 - 2403787, 2403789 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.