சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, 14 வயது பெண்ணுக்கு, இன்று நடக்கயிருந்த திருமணத்தை, நேற்று இரவு, வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.
நாமக்கல் அருகே புதுச்சத்திரம், தத்தாதிரிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். அவர், தனது, 14 வயது மகளுக்கு, ராசிபுரம் அருகே வையப்பமலையை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன், 23, என்பவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடு செய்துள்ளார். திருமணம், இன்று, தத்தாதிரிபுரத்தில் உள்ள கோவிலில் நடக்கயிருந்தது.
அதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதனிடம் புகார் செய்யப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி, நாமக்கல் தாசில்தார் ராமசாமி தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் போலீஸார், நாகராஜன் வீட்டுக்கு நேற்று இரவு சென்று, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும், பெண்ணுக்கு திருமண வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்யும்படியும் அறிவுத்தினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.