நாமக்கல்:
அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், தொழிலாளர்களின் விரோத
போக்கை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம், நாளை (ஃபிப்., 22),
நாமக்கல்-மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடக்கிறது.
மாநில
சர்க்கரை பிரிவு தலைவர் கருமண்ணன் தலைமை வகிக்கிறார். மாவட்ட அண்ணா
தொழிற்சங்க செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். எம்.எல்.ஏ., பாஸ்கர்
சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை
தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தொழிலாளர்
நலச்சட்டங்களை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அனைத்து
தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில், தொழிலாளர் நலச்சட்டத்தை உருவாக்க
வேண்டும். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு சமூக
பாதுகாப்புக்கான உத்திரவாதத்தையும் வழங்க வேண்டும்.
ரயில்வே போன்ற
பொதுத்துறை நிறுவனங்களில், ஒப்பந்த முறையை ரத்து செய்து, அவர்களை பணி
நிரந்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்படுகிறது. பேரவை நிர்வாகிள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர்
பங்கேற்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.