திருச்செங்கோடு:
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவை
முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்தக்குட ஊர்வலம்
நடந்தது.
திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன்
கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் ஃபிப்ரவரி மாதம் மாசி குண்டம்
திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான மாசி
குண்டம் திருவிழா, நேற்று துவங்கியது.
விழாவை முன்னிட்டு குண்டம்
இறங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையடிக் குட்டையில் இருந்து
தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை
அடைந்தனர். மேலும், அம்மன் அழைத்தல், குலாலர் வீட்டில் இருந்து அக்னிச்
சட்டி அழைத்து வந்து சக்திகரக திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து,
இன்று இரவு, 108 அக்னி கரகம் மற்றும் அலகு குத்துதல், நான்கு ரத வீதிகளில்
உலா வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனையும் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.