நாமக்கல்:
கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, நேற்று
மாலை, பரிவட்டம் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்றதால், மோகனூர் - ப.வேலூர்
சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோகனூர் - ப.வேலூர்
சாலையில், வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவில் கும்பாபிஷேக விழா,
இன்று நடக்க உள்ளது. அந்த விழாவுக்கு, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
மனோகரனை, கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுக்கச் சென்றனர்.
அப்போது,
இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு, நிர்வாகிகள் பரிவட்டம் கட்டி மேளதாளம் முழங்க,
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பள்ளி,
கல்லூரி விடும் நேரத்தில், இந்நிகழ்ச்சி நடந்தது.
தவிர, வாரச்சந்தை
நடைபெறும் சாலை வழியாக ஊர்வலம் நடந்தது. அதன் காரணமாக, மாலை, 5 மணி முதல், 6
மணி வரை, மோகனூர் - ப.வேலூர் சாலையில் கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது.
இது, அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.