நாமக்கல்:
இரண்டாவது நாளாக நேற்று நடந்த பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில், வங்கி,
தபால் நிலைய ஊழியர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றதால், அவற்றின் பணிகள்
முடக்கமடைந்தன. அதே நேரத்தில், பஸ், சரக்கு வாகனப் போக்குவரத்து சீராக
இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையில், பாதிப்பு எதுவும் இல்லை.
பல்வேறு
கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவிலான பொது வேலைநிறுத்தப்
போராட்டம், இரண்டாவது நாளாக, நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தை
பொறுத்தவரை, போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கி, தபால் நிலையம்,
பி.எஸ்.என்.எல்., போன்ற, மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் பெரும்பாலானோர்
பங்கேற்றனர்.
அதனால், மேற்குறிப்பிட்ட அலுவலக பணிகள் முடக்கமடைந்தன. அதே
நேரத்தில், பஸ், உள்ளிட்ட சரக்கு வாகனப் போக்குவரத்து வழக்கம் போல்
இருந்தன. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையில், பாதிப்பு எதுவும் இல்லை.
இதனிடையே,
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல்-மோகனூர் சாலை,
அண்ணாதுரை சிலை அருகே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ணியினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை
வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி முன்னிலை வகித்தார்.
நாமகிரிப்பேட்டை வட்டார செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். சங்க பொதுச்
செயலாளர் செல்வராசன் பேசினார். பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்
சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.