ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், ஃபிப்ரவரி, 22, 23ம் தேதிகளில், அரசின் இலவச
ஆடுகளுக்கான குடற்புழு நீக்க முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் சண்முகம்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 201 1-2
012ம் ஆண்டில், 3,775 பேருக்கு, 15,100 ஆடுகளும், 2012, ஏப்ரல் முதல்,
2013, ஃபிப்ரவரி வரை, 4,246 பேருக்கு, 16,984 இலவச ஆடுகளும்
வழங்கப்பட்டுள்ளது. அரசின் இலவச ஆடுகளின் நலனை காக்கும் வகையில்,
ஃபிப்ரவரி, 22, 23ம் தேதி காலை, ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து
ஆடுகளுக்கும் இலவசமாக குடற்புழு நீக்க முகாம் நடத்த கால்நடை
பராமரிப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடுகள் வழங்கப்பட்ட
அந்தந்த கிராமத்தில் குடற்புழு நீக்க முகாம் நடத்தப்படும். குடற்புழு
நீக்கம் செய்வதன் மூலம் ஆடுகளின் உடல் கூடுவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு
சக்தி, இனவிருத்தி திறன் அதிகரித்து ஆடுகளின் மூலம் கிடைக்கும வருவாய்
அதிகரிக்கும் என்பதால், பயனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.