ஈரோடு:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட்டதை வரவேற்று, ஈரோட்டில்,
அ. தி.மு.க., கட்சி சார்பில், நேற்று எம்.ஜி.ஆர்., சிø லக்கு மாலை
அணிவித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். கட்சியினர் சாலையில் பட்டாசு
வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாநகராட்சி மேயர் பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது:
காவிரி நடுவர்
மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட்டது, தமிழகத்துக்கு
கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். தமிழக முதல்வர் தனி முயற்சியால், நீண்ட
இழுப்பறிக்கு பின் அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் பயனடைவர், என்றார்.
மாநகர்
மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். நான்காவது மண்டல தலைவர்
காஞ்சனா பழனிசாமி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர்
மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.