கோபிசெட்டிபாளையம்:
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த, 1,008 பால் குட
ஊர்வலத்தை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
முதல்வர்
ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாள் விழா ஃபிப்., 24ம் தேதி கொண்டாட உள்ளனர்.
கோபி நகர அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, 1,008
பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது.
அண்ணா பாலம் அருகே உள்ள சுப்பிரமணியர்
கோவிலில் பால் குட ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்துக்கு நகராட்சி தலைவி
ரேவதிதேவி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செங்கோட்டையன், ஊர்வலத்தை துவக்கி
வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், பச்சை பாலசுப்பிரமணிய
ஸ்வாமி கோவிலை அடைந்தது.
முதல்வர் பெயரில் சிறப்பு அர்ச்சனை,
பாலபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. 1,008 பெண்களுக்கு சேலை, அன்னதானம்
வழங்கப்பட்டது. முதல்வர் சிறப்புடன் வாழ, தங்க தோராட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ.,
ரமணீதரன், நகராட்சி துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி கணேஷ்,
யூனியன் தலைவர் சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், தம்பி
சுப்பிரமணியம், யூனியன் கவுன்சிலர் வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.