கோபிசெட்டிபாளையம்: அரிசி ஆலை அதிபரை தாக்கி, பணம் பறித்த வழக்கில் மும்பையை சேர்ந்த கைதியை போலீஸார் கைது செய்தனர்.
கோபி
அருகே ஓடக்காட்டூரை சேர்ந்தவர் ராமசாமி. அரிசி ஆலை வைத்துள்ளார். இவர்
கடந்த, 2002 ஆண்டு ஃபிப்ரவரி மாதம் அரிசி ஆலைக்கு சென்றார். அவரை வழி
மறித்த கும்பல் ஒன்று, அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக் கொண்டு
தப்பினர். சிறுவலூர் போலீஸார் விசாரித்து, எட்டுப்பேர் கொண்ட கும்பலை கைது
செய்தனர்.
தலைமறைவான மும்பையை சேர்ந்த ராஜன் என்ற ராமசந்திர சவுகானை
என்பவரை தேடிவந்தனர். தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு,
இணையதளம் மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில், மும்பை தானே சிறையில் இவர்
அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மும்பை சென்ற சிறுவலூர் போலீஸார்,
ஜெயலில் இருந்த ராஜனை கைது செய்து, சிறுவலூருக்கு அழைத்து வந்தனர். கோபி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கோபி சிறையில் அடைத்தனர். இன்று
மீண்டும் மும்பை ஜெயிலுக்கு அவரை அழைத்து செல்ல உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.