ஈரோடு:
புஞ்சை புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 1963ம் ஆண்டு பள்ளி இறுதி
தேர்வு எழுதி பிரிந்த பள்ளி மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப்பின், பொன்விழா
ஆண்டில் ஒன்று கூடினர்.
இதில், கலந்து கொண்ட, 23 மாணவர்கள், தங்கள்
அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தங்களது பணி, தற்போதைய நிலைகளை
பகிர்ந்தனர். பொன்விழா கண்டன மாணவர்கள் சேர்ந்து மாணவர் அமைப்பை உருவாக்கி,
அதன் தலைவராக தங்கவேலு, செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் அப்துல்முனாப்,
துணைத்தலைவர் அருணாசலம், துணைச்செயலாளர் தங்கவேல்முருகையன் ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை தங்கவேலு, சுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர்.தற்போதைய சந்திப்பில் விடுபட்ட பிற மாணவர்களையும் சேர்த்து, மார்ச், 24ம் தேதி மீண்டும் கூடுவது என முடிவு செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.