ஈரோடு: ஈரோடு அடுத்த சிவகிரியில், மாணவி கொலையை விரைவில் விசாரிக்கக் கோரி, கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஈரோடு
மாவட்டம், சிவகிரி, கோட்டைபுதூரை சேர்ந்தவர் நல்லசாமி மகள் நந்தினி, 19.
கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்
படித்து வந்தார். கடந்த ஜனவரி, 20ம் தேதி காலை, சிவகிரி சின்னியம்பாளையம்
அரசு மருத்துவமனை ரோட்டில் பாதி எரிந்த நிலையில், நந்தினி மர்மமாக இறந்து
கிடந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
இந்நிலையில், நந்தினி கொலை வழக்கை விரைவில் விசாரிக்கவும்,
மாணவி கொலையான வழக்கில் நீதி கேட்டும், சிவகிரி மார்க்கெட்டில் கையெழுத்து
இயக்கம் நடத்தப்பட்டது.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவி
நந்தினி கொலை வழக்கில், விசாரணையை விரைந்து நடத்தி கொலையாளிகளை
கண்டுபிடிக்க வேண்டும். மாணவி நந்தினி கொலை வழக்கில், முதல்வர் ஜெயலலிதா
நேரிடையாக தனிக்கவனம் செலுத்த வேண்டும், என கோஷம் எழுப்பினர்.
கூட்டு
நடவடிக்கை குழு தலைவர் கோபால் தலைமை வகித்தார். செயலாளர் வரதராஜன்,
பொருளாளர் தேவராஜா, ஒருங்கிணைப்பாளர் சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.