ஈரோடு:
ஈரோட்டில், பெண்கள், பெண் குழந்தைகள் புறக்கணிப்புக்கு எதிரான பிரச்சார
இயக்கம் சார்பில், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை
கூட்டம் நடந்தது.
மாநில அமைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். ஈரோடு,
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில்
இருந்து, 45க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள், பெண் சிசு கொலை,
பெண்கள் மீதான வன்முறைகள் ஆகியவற்றில் இருந்து பெண்களை காப்பது
குறித்தும், பெண்கள் பாதுகாப்பில் அரசின் பங்கு குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
இந்திய அமைப்பாளர் இளங்கோ, மக்கள் நல்வாழ்வு இயக்கம்
அமீர்கான், தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா உள்பட பலர்
பங்கேற்றனர்.