குரியன் விவகாரம் : இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் கமல்நாத்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல், குரியன் விவகாரம் ஆகியவை, பார்லிமென்டின் இரு சபைகளிலும், இன்று முதல், புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்காக, குரியன் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் கமல்நாத், ராஜ்யசபாவில், இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று முதல், பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும், அமர்வுகள் துவங்கவுள்ளன. இத்தாலி நிறுவனத்துடனான, ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு, தற்போது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

"இந்த விவகாரத்தில், இத்தாலி நிறுவனத்திடமிருந்து, மத்திய அரசு தரப்பில், லஞ்சம் வாங்கியது யார்' என, எதிர்க்கட்சிகள், குரல் எழுப்பி வருகின்றன. அதேபோல், ராஜ்யசபா துணை தலைவர், பி.ஜே.குரியன், சூரியநெல்லியை சேர்ந்த, மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகாரும், இந்திய அரசியலில், பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

"பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, குரியன், தன், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும், போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த இரண்டு விவகாரங்களும், பார்லிமென்டின் இரு சபைகளிலும், இன்று புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னைகளை வலியுறுத்தி, பார்லிமென்ட்டை முடக்கவும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளை சமாளித்து, பார்லிமென்ட்டை சுமுகமாக நடத்துவதற்கான முயற்சியில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதற்காக, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர், கமல்நாத் தலைமையில், நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், ஹெலிகாப்டர் மற்றும் குரியன் விவகாரங்கள் தொடர்பாக, எதிர்க்கட்சிகள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தன. குறிப்பாக, இடதுசாரி கட்சிகள்,"குரியன் விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு, விவாதம் நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்தன. ஆனாலும், சமாஜ்வாதி உள்ளிட்ட சில கட்சிகள், இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டன.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின், ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில், ஓட்டெடுப்பு இல்லாத விவாதம் நடத்துவதற்கு, மத்திய அரசு முன்வந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், குரியன் விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர், கமல்நாத், ராஜ்யசபாவில், இன்று, அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

"ஹெலிகாப்டர் மற்றும் குரியன் விவகாரங்கள் தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், இன்று முதல், அடுத்த சில நாட்களுக்கு, அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
22-பிப்-201310:13:31 IST Report Abuse
Guru அறிக்கையில் என்ன இருக்க போகிறது, அவர் நிரபராதி அவர்மேல் வேண்டுமென்றே பழி போடப்பட்டு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-பிப்-201308:34:55 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இன்னும் ஒன்றை விட்டு விட்டீர்களே, அது இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம், தமிழகம் தவிர்த்து பல மாநிலங்களில் இந்த வேலை நிறுத்தம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது, செய்தி நிறுவனங்கள் வேறு செய்தி இல்லாமல் போனால் இதை மட்டுமே ஒலிபரப்பும், அவர்களை திசை திருப்புவதும், அவர்கள் மூலம் மக்களை திசை திருப்புவதும் இது போன்ற செயல்களால் மட்டும் முடியும், பக்ராக்கள் அப்பாவி மதத்தினர்(காவியாகட்டும்/தாடிக்களாகட்டும்) , ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கான்-கிரசின் ராஜதந்திரம், அப்பாவி மக்களின் உயிர். ஒரு மதத்திற்கு கெட்டபெயர், இருந்தாலும் அந்த மதத்து மக்கள் கான்-கிரசிர்க்கு ஒட்டு போடுவார்கள், என்னே விந்தை இது.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
22-பிப்-201308:23:08 IST Report Abuse
sundaram நீங்க என்ன அறிக்கை தாக்கல் செய்யப்போறீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? ஒன்னு குரியன் மாதிரி உத்தமபுத்திரன் உலகத்துல கிடையாதுன்னு சொல்லுவீங்க, இல்லேன்னா குரியனுக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லேன்னு சொல்லுவீங்க, இல்லேன்னா அன்னிக்கு தேதில குரியன் இந்தியாவுலேயே இல்லை அவரு வெளிநாட்டுலதான் பாலியல் பண்ணிக்கிட்டு இருந்தாரு இந்தியாவுல பண்ணலைன்னு சொல்லுவீங்க, இதுல எதுவும் எடுபடாதுன்னு தெரிஞ்சா எதிர்கட்சிகள் மேல ஏதாவது பொய்யான பழியை சுமத்தி அவங்க அதுலேந்து தங்களை காப்பாத்திக்க வழி தேடறமாதிரி வச்சுடுவீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்