நாகாலாந்தில் 83 %, மேகாலயாவில் 88% ஓட்டுப்பதிவு| Dinamalar

நாகாலாந்தில் 83 %, மேகாலயாவில் 88% ஓட்டுப்பதிவு

Added : பிப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நாகாலாந்தில் 83 %, மேகாலயாவில் 88% ஓட்டுப்பதிவு

கொகிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், நாகாலாந்தில், 83 சதவீத ஓட்டுக்களும், மேகாலயாவில், 88 சதவீத ஓட்டுக்களும் பதிவாகின.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், துயன்செங் சாகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் திடீரென இறந்ததால், அந்தத் தொகுதி தவிர, மற்ற, 59 தொகுதிகளில், நேற்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 11.93 லட்சம். இவர்களில், ஆண் வாக்காளர்கள், 6.03 லட்சம். தேர்தலில், நாகா மக்கள் முன்னணி கட்சி மட்டுமே, 59 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தியிருந்தது. காங்கிரஸ் 57, தேசியவாத காங்கிரஸ் 15, பா.ஜ., 11, ஐக்கிய ஜனதா தளம் மூன்று, ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டு மற்றும் ஐக்கிய நாகாலாந்து ஜனநாயக கட்சி ஒரு தொகுதி என்ற ரீதியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். துணை ராணுவப் படையைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரின், பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. கிராமப்புறங்கள் உட்பட, அனைத்து பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளிலும், மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சில ஓட்டுச் சாவடிகளில் மட்டும், ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவரும், மாநில முதல்வருமான, நெபியூ ரியோ, தன் சொந்த கிராமத்தில் ஓட்டளித்தார். காலை முதல், மாலை, 4:00 மணியுடன் முடிவடைந்த ஓட்டுப்பதிவில், 83 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதேபோல், மேகாலயா மாநிலத்தில் உள்ள, 60 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்தத் தொகுதிகளில், மொத்தம், 345 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். போட்டியிடும் வேட்பாளர்களில், முதல்வர், முகுல் சங்மாவும் ஒருவர்.
இம்மாநிலத்தில் செயல்படும் பிரிவினைவாத அமைப்பான, ஹைனிடிரப் தேசிய விடுதலை கவுன்சில், மக்கள் ஓட்டளிப்பதை தடுப்பதற்காக, நேற்று முன் தினம், காலை, 6:00 மணி முதல், 36 மணி நேர, "பந்த்'திற்கு அழைப்பு விடுத்தும், அதைப் புறக்கணித்து மக்கள் விறுவிறுப்பாக ஓட்டளித்தனர். காலை,7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவில், மதியம், 1:00 மணி வரை, 51 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. மாலை வரை, 88 சதவீத ஓட்டுக்கள் பதிவானதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X