Advertisement
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் : கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க ஏழை மக்களின் நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால், கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என, அ.தி.மு.க., மருத்துவ அணித் தலைவர் மைத்ரேயன் தெரிவித்தார்.ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் முன்பாக, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கிரீன்பீல்டு விமான நிலையத்திற்காக ஸ்ரீபெரும்புதூர், விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரியும், திருவள்ளுர் கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்ற அப்பாவி பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டிய தி.மு.க., அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அ.தி.மு.க., மருத்துவ அணித் தலைவர் மைத்ரேயன், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6,921 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை தி.மு.க., அரசு செய்து வருகிறது.இதனால் விவசாயம் குறையும். ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள், அரசு பள்ளிக் கட்டடம், கல்லூரி, கோவில்கள் இடிக்கப்படும். இதை தடுக்க விவசாயிகள், கிராமங்களில் தங்கள் எதிர்ப்பை காட்டினர். சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாசில்தார், பொதுமக்களிடம் சமரசம் பேசினார். "உங்கள் எதிர்ப்பை கலெக்டரிடம் மனு மூலம் தெரியப்படுத்துங்கள்' என்றார்.அதை ஏற்று, கடந்த 12ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை சந்திக்கச் சென்ற மக்களை போலீசார் மறித்து தடியடி நடத்தினர். 20க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.அரசுப் பணியில் இருப்போர் பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும். தி.மு.க., அரசின் கைக்கூலியாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆறு மாதத்தில் ஆட்சி மாறும்.இப்பகுதியில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும். இல்லையெனில், கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும்.இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.