பொட்டு சுரேஷ் கொலையில்கைதானவரை ஆஜர்படுத்த வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொட்டு சுரேஷ் கொலையில்கைதானவரை ஆஜர்படுத்த வழக்கு

Added : பிப் 27, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:மதுரை தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், கைதான ஜோதியை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில், சுப்பிரமணியபுரம் இன்ஸ்பெக்டர் ஆவணங்களை தாக்கல் செய்ய, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை கீரைத்துறை முனியசாமி தாக்கல் செய்த மனு: மகன் ஜோதி (எ) ஜோதிவேலன். பி.பி.ஏ.,படித்துள்ளார். நிதி நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தார். பிப்.,12 ல் திருநெல்வேலிக்கு திருமணத்திற்கு செல்வதற்காக, ஜோதிவேலன் ரயில்வே ஸ்டேஷன் சென்றார். அதன் பின், எந்த தகவலும் இல்லை. அவரது மொபைல்போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

அன்று இரவு 8 மணிக்கு என் மொபைல்போனில் தொடர்பு கொண்டவர், தான் ஜோதியின் நண்பர் என்றார். அவர்," நாங்கள் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தபோது, திடீரென 7 பேர் வந்தனர். ஜோதியை இழுத்துச்சென்றனர். அவர்கள், கீரைத்துறை போலீசார் என்றனர்."பின்னால் வராதீர்கள்' என மிரட்டினர். ஒருவர், ""அட்டாக் பாண்டியுடன் சேர்த்து, இவரையும் என்கவுன்டரில் போடப் போகிறோம்,'' என மிரட்டினார்,' என்றார். அதன்பின், எந்த கோர்ட்டிலும், ஜோதியை ஆஜர்படுத்தவில்லை. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஏ.செல்வம், எம்.சத்யநாராயணன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் நீலமேகம் ஆஜரானார். அரசுத் தரப்பில், "மனுதாரரின் மகனை, "பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில், சுப்பிரமணியபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்,'' என்றனர்.நீதிபதிகள்,"மனுதாரரின் மகன் மீது வழக்கு எதுவும் உள்ளதா? இருந்தால், வழக்கு ஆவணங்களை நாளை ( இன்று) இன்ஸ்பெக்டர் ஆஜராகி, தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X