சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில் பொறுப்புக்கு வந்த பின், சட்டத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் பதவியை இழந்துள்ளனர் என்ற சென்டிமென்ட், மீண்டும் ஒருமுறை பலித்துள்ளது.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மே மாதம், ஆட்சிப் பொறுப்புக்கு, அ.தி.மு.க., வந்தது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது, சட்டத் துறை அமைச்சராக, இசக்கி சுப்பையா பொறுப்பேற்றார். சட்டத்துறை அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே, அவர் அமைச்சர் பதவியை இழந்தார். அதன்பின் சட்டத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பாக, செந்தமிழன் பதவி வகித்தார். சட்டத்துறை பொறுப்பு வந்த சில மாதங்களிலேயே, அவரும் அமைச்சர் பதவியை இழந்தார். அடுத்ததாக சட்டத்துறை அமைச்சராக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற, 45 நாட்களிலேயே அவரும் அமைச்சர் பதவியை இழந்தார். அடுத்ததாக சட்டத்துறை சி.வி.சண்முகம் வசம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. அந்த பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே, சண்முகமும் அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு பின் சட்டத்துறை, அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த சிவபதியிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
சட்டத்துறை கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த சிவபதி, நேற்று அதிரடியாக அமைச்சர் பதவி மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட செயலர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். சட்டத் துறையை பெற்ற சில மாதங்களிலேயே சிவபதி, பதவியை இழந்துள்ளார். இதன்மூலம் சட்டத் துறை பெற்றால், அந்த துறை வைத்துள்ள அமைச்சரின் பதவி அனைத்தும் காலியாகிவிடும் என்ற சென்டிமென்ட், சிவபதி விஷயத்திலும் பலித்துள்ளது. ஏற்கனவே சட்டத் துறை அமைச்சர்களாக பதவி வகித்த வந்த இசக்கி சுப்பையா, செந்தமிழன், பரஞ்ஜோதி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம், தற்போது எம்.எல்.ஏ., பதவி மட்டுமே ஒட்டிக் கொண்டுள்ளது. அந்த துறையின் ராசியால் பதவி இழந்தவர்கள், மீண்டும் அரசியலில், இதுவரை முன்னுக்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் தற்போது, சிவபதியும் சேர்ந்துள்ளதால், அவரால் எந்த பலனையும் அடையாத, திருச்சி மாவட்ட, அ.தி.மு.க.,வினர் மிகுந்த சந்தோஷமடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டத்துறை தற்போது கூடுதல் பொறுப்பாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் செண்டிமெண்ட் -ஆவது .... கிண்டிமென்ட் -ஆவது எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அணுகுமுறைக்குக் கூடவா விளக்கம் தேவை ???? கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா ???? "நேற்று மந்திரி ... இன்று எந்திரி ...." என்றும் "நேற்று குப்பையில் .... இன்று கோபுரத்தில்" என்றும் சொல்லப்பட்ட விவகாரம் இவரது அமைச்சரவை மாற்றம் .... "இவரை விட "சின்னம்மாவை" அனுசரித்துப் போனால் பதவி நீடிக்கும் என்ற ரகசியத்தை அறிந்திருப்பார்களே ... பிறகும் ஏன் கோட்டை விட்டார்கள் ?" என்ற சந்தேகம் அரிக்கிறது .... திறமை அற்றவர்கள் என்பது காரணம் என்றால் சிலருக்கு உடனடியாக வேறு துறைகள் கிடைத்தாலும் அதிலும் நிலைத்திருப்பதில்லையே .... ஐந்தாண்டுகளில் ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பத்து முறை துறை மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம் ... குறைந்த பட்சம் அவர் முன்பு கவனித்த ஒன்பது துறைகளில் அவருக்குத் திறமை இல்லை என்று ஆகிறதே ...???? பலர் முன்பு பெற்ற துறைகளையே சில மாதங்கள் கழித்து மீண்டும் பெறுவதைப் பார்க்க முடிகிறது ... முன்பு திறமைக் குறைவு இருந்தது என்றால் ... தற்போது அந்தத் திறமையை வளர்த்துக் கொண்டு விட்டார்கள் என்றா பொருள் ???? பேக்கு மாதிரி வளைந்து வணங்கவும் .... அசட்டுச் சிரிப்பு சிரிக்கவும் ... முதல்வர் பேசும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் மேஜையைத் தட்டவும் .... நாளும் கிழமையுமா முதல்வரைச் சந்தித்து ஆசி பெறவும்தானா பதவி ???? மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ...
எதெற்கெல்லாமோசெண்டிமென்டையும் சகுனத்தையும் நம்ப சொல்கிறீர்களே... திறமையற்ற அமைச்சர்களின் பதவி பறிப்பு என்று செய்தி போடலாம். இன்னும் எத்தனை முறை மந்திரிகளை மாற்றினாலும் திறமையானவர்களை ஜெயாவால் தமிழகத்துக்கு நல்ல அமைச்சர்களாக தர முடியாது. எம் எல் ஏக்களுக்கு சீட் கொடுக்கும் போதே தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தகுதியானவர்களை கண்டறிந்து அமைச்சராக்க வேண்டும், திறமையான அமைச்சர்களின் சிறு குறைகளை பெரிது படுத்தாமல்.... அவர்களிடம் வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படித்தான் ஆட்சி முடியும் வரை மாற்றி கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.