சென்னை: ""தி.மு.க., தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் மணிவிழாவையொட்டி, தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் தென் சென்னை மாவட்டச் செயலர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
மணமக்களை வாழ்த்தி, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்திற்கு மாத்திரமல்ல, இந்தியாவிற்கு வருகின்ற நெருக்கடிகளையெல்லாம் நாம் தீர்த்து வைத்திருக்கிறோம். தி.மு.க.,வில் பல அணிகள் இருக்கின்றன. சில அணிகள் பிணிகளாக ஆகிவிடுகின்றன. அந்த பிணிகளைப் போக்கி அணிகளாகவே, அணி என்றாலே அழகு என்று தான் பொருள். அணியைப் பிணியாக ஆக்காமல், அதை அணியாகவே இன்றைக்கு வைத்திருக்கும் பெருமை, அந்தப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பதை நான் மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இவைகளில் கடமை, கண்ணியம் ஆகியவைகள் சிதைந்தாலும் பரவாயில்லை. கட்டுப்பாடு காக்க வேண்டும். அது தான் ஒரு இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற அந்தப் பெரும் உண்மையை தலைமேல்தாங்கி, மனதில் பதித்து இந்த கட்சியை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.
கட்சி நண்பர்கள், தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்ன தான் உங்களுக்குள் சங்கடங்கள் ஏற்பட்டாலும், வேதனைகள் விளைந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த கட்சிலே நம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சியை கட்டிக் காக்க வேண்டியது, இந்த கட்சியின் மானத்தைக் காப்பற்ற வேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து, அப்படி செய்தால் தான், நீங்கள் இணைந்திருக்கின்ற அணிக்குப் பெருமை. எந்த அணியாக இருந்தாலும், எதிரிகளைப் பார்த்து, தலைக்குனியக் கூடிய நிலை ஏற்படாமல் வாழ வேண்டும், வளர வேண்டும், கட்சியை வளர்க்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
திருமணம் செய்து கொண்ட ஒவ்வொரு ஜோடிக்கும் கிரைண்டர், பீரோ, கட்டில், மெத்தை உட்பட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில் தேர்தல் நிதியாக, முதல் கட்டமாக 2 கோடி ரூபாய் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.
ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்:
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மணிவிழாவை ஒட்டி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று, 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இந்த விழாவுக்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்பார் என, கட்சியினர் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர் வரவில்லை என்பதால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த ஆண்டு நடந்த இலவச திருமண விழாவுக்கு ஸ்டாலின் வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஸ்டாலினுக்கு மணி விழா என்பதால், திருமண ஜோடிகளை வாழ்த்த வருவார் என, மணமக்களின் உறவினர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வரவில்லை. தனது பிறந்தநாளையொட்டி, விழா மேடையில் தி.மு.க., முன்னோடிகள் தன்னை புகழ்ந்து பேசுவதை அவர் விரும்பாத காரணத்தினால், திருமண விழாவுக்கு ஸ்டாலின் வரவில்லை என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இன்று காலை, 10:00 மணி முதல், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தொண்டர்களிடம் வாழ்த்துக்களை ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தி.மு.க., சார்பில், 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இந்த விழாவில் ஏற்கனவே 30 ஜோடிகளுக்கு திருமணமாகிவிட்டது , இப்பொழுது மறுபடியும் கணக்குகாக இந்த 60 ஜோடிகளுக்கு திருமணம் என்று ப்ராடுவேலைகளில் தி.மு.க நாடகமாடுகிறது , 2 - G அடித்த பணத்தை வைத்து இப்பொழுது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று மக்களை ஏமாற்றுகிரார்கல்
இந்த தமிழ் இன துரோகி கருணா நாடக நடிப்பில் கை தேர்ந்தவர் .... நாளொரு நடிப்பும் நித்தமும் பொய் சொல்லி வாழ்கை கழிந்து விட்டது இவருக்கு .. இவருக்கு மனைவி துணைவி தாரம் எல்லாம் எத்தனைகளோ பல ... இவராலே இவர் குடும்பத்தை ஒற்றுமையாய் வைக்க துப்பில்லை... தொண்டர்களை ஒற்றுமை இருக்க சொல்றார் இந்த தமிழ் இன துரோகி...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.