Concept of green revolusion is fake: Nammalvar | பசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்

Added : பிப் 28, 2013 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Concept of green revolusion is fake: Nammalvar பசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்

மதுரை: ""இயற்கை விவசாயத்தை அழித்த பசுமைப் புரட்சி போலியானது,'' என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
மதுரையில் நடந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசியதாவது: செயற்கை விவசாயத்தால், தாய்ப் பால், பசும்பால் கூட, விஷமாகிவிட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதும், செயற்கை விவசாயம் தான். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் "ஆர்கானிக் பாஸ்பெடிக்' ரசாயனம், உடலின் கொழுப்புச்சத்தில் தங்கி, மூளை, மார்பகம், இடுப்பு பகுதிகளை பாதிக்கும். பசுமைப் புரட்சி செய்வதாகக் கூறி, ரசாயனங்களை தாராளமாக்கிவிட்டனர். இயற்கை விவசாயத்தை அழித்த பசுமைப் புரட்சி போலியானது. ரத்தசோகை நோய், செயற்கை விவசாயத்தால் தான் ஏற்படுகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை கூட பாதிக்கும், அபாய நோய் அது. செயற்கை விவசாயத்தால், கிராமங்களிலிருந்த 75 சதவீதம் விவசாயிகள், 56 சதவீதமாக குறைந்துவிட்டனர். விவசாயிகள், கிராமங்களில் வசிக்கும் வகையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். கிராமங்களில் காடுகள் வளர்க்க வேண்டும்; தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. கிராமங்களின் நீர்வளத்தை அதிகரிக்க வேண்டும். செயற்கை நெல் விவசாயத்தால், ஒரு ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் மட்டுமே பெற முடியும். இயற்கை விவசாயத்தால் 5,000 கிலோ மகசூல் செய்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோலைமலை சாதனை படைத்துள்ளார். அவரின் திருத்திய நெல் சாகுபடிக்கு, மத்திய, மாநில அரசுகளின் விருது கிடைத்துள்ளது. இயற்கை விவசாயத்தை, ஊக்குவிக்க வேண்டும், என்றார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சம்பத்குமார், செயற்பொறியாளர் அயூப்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
03-மார்-201314:27:10 IST Report Abuse
p.saravanan ஸ்ரீ மகாகனம் நம்மாழ்வார் அவர்களே தற்பொழுது நாடு இருக்கும் தருணத்தில் விவசாயம் பற்றிய உங்களது கருத்துகளை இந்தியாவில் உள்ள அணைத்து விவசாயிகளும் பின்பற்றினால் , உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெரும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
01-மார்-201320:20:31 IST Report Abuse
தமிழ் குடிமகன் உண்மையை விட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டனர் நம் அரசியல்வாதிகள். இனி திரும்புவது சிரமம் .
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-201318:22:29 IST Report Abuse
Sivakumar Manikandan நீங்க சொல்லுறத கேட்க ஆள் இல்லை.................சோனியா சொன்னதான் ketpaankalaam .................... விவசாயம் பண்ண தண்ணி வேணும் ...........தண்ணி தந்தா விவசாயி நிலைத்த விக்க மாட்டான்.......அதனால் DMK காரங்க காசுபாக்குரதுக்காக காவேரி தண்ணிய வரவிடாம பண்ணி விவசாயி நிலைத்த வாங்கி சுருட்டிகிட்டு இருகாங்க.........நீங்க வேணுமுன்ன ரெண்டு ஏக்கர் வாங்கி பிளாட் போடுங்க .............
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
01-மார்-201317:25:24 IST Report Abuse
K.vijayaragavan தேசவிரோத, நாசகார காங்கிரஸ் இந்த நாட்டுக்கு செய்த, செய்து வரும் துரோகங்கள் ஒன்றா, இரண்டா? எதேச்சாதிகார, கம்யூனிஸ்டான நேரு, ரஷ்ய எஜமானர்களை பார்த்து அறிமுகப்படுத்தியதே இந்த பசுமை புரட்சி. நாட்டு நன்மையை விட, தன் பேரும் புகழுமே முக்கியம் என்று நினைத்து நேரு அன்று இந்தியாவுக்கு செய்த துரோகங்கள் இன்று நாடு வலுவிழந்து, பொலிவிழந்து மோசமான நிலைக்கு தள்ளிப்பட்டிருக்கிறது. நம்மாழ்வார் போன்ற மகான்களால் தான் இந்த மண் இன்னும் உயிரோடு இருக்கிறது. உண்மையாகவே நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் நம்மாழ்வார் போன்றவர்களின் அறிவுரைகளை கடைப்பிடித்து இந்த மண்ணை காப்பாற்றவேண்டும். அத்துடன், சதிகார, சுயநல காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்ற உறுதியையும் ஏற்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Arunkumar - Bangalore,இந்தியா
01-மார்-201316:07:42 IST Report Abuse
Arunkumar அய்யா, இயற்கை விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஏதேனும் முகவரி உள்ளதா?
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
01-மார்-201315:54:20 IST Report Abuse
maravan இப்போது உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டு கம்பனிகளுக்கு சலுகை காட்டுவதை மிக பெரிய சாதனையாக நினைக்கிறார்கள்....இயற்கையோடு ஒத்துபோக மறுக்கிறார்கள்...இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு தமிழ் நாடு முழுவதும் நடத்தப்படவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-மார்-201315:27:18 IST Report Abuse
Nallavan Nallavan பல லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள்,,,, சரக்குக் கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு ( ரசாயனக் கழிவுகளும் கூட ...) இதுவரை நமது இந்தியத் துறைமுகங்களில் கொட்டப்பட்டுள்ளன .... கொட்டியது அமெரிக்க ... ஐரோப்பிய நாடுகள் .... ( நாம் மட்டுமே இலக்கு அல்ல .... அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் கூடத்தான் .... இதை நினைத்து வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம் ) .... பூனைக்கு யார் மணி கட்டுவது ???? பலருக்கு இந்த உண்மையே தெரியாது என்பதுதான் இன்னும் ஆபத்தானது ....
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
01-மார்-201314:56:57 IST Report Abuse
saraathi கோக்கையும் பெப்ப்சியையும் அரசாங்கங்கள் அறிமுகப்படுத்தலாம். ஆனால் மக்களின் அமோக ஆதரவு இல்லாமல் அவற்றால் இவ்வளவு வளர்ச்சியை காணமுடியுமா?தலைமுறை தலைமுறையாக நிலம் வைத்திருந்து மாடு வளர்த்துவந்து சுத்தமான பால் கறந்து விற்ப்பவனால் தனக்கான ஊதியத்தை கூட பெறமுடியவில்லை.ஆனால் ஓரடி நிலமும் வைத்திருக்காமல் இங்குவந்து நமது நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை எடுத்து பூச்சிமருந்து கலந்து குளிர்பானம் எனும் பெயரில் விர்ப்பவர்களால் கோடி கோடியாக சம்பாரிக்க முடிகிறது. பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமா? இளநியில் கூட காலாவதி தேதி பார்ப்பவர்கள் பூச்சிமருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க தயங்குவதே இல்லை.இளநியிலும் பூச்சி மருந்துகலந்து வெளிநாட்டுகாரன் கொண்டுவந்து விற்றால்தான் குடிப்பார்கள் போலும்.மாற்றம் நம்மிடமிருந்துதான் துவங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
davan - ,jhhgvbh,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-201314:42:45 IST Report Abuse
davan எனக்கும் விவசாயம் செய்வதற்கான ஆசை உண்டு. அனால் அதற்கான ஆட்கள் தற்போது கிடைப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
01-மார்-201313:41:06 IST Report Abuse
ksv நம்மாழ்வார் போன்ற நல்லவர்களின் கருத்தை நம் தேர்ந்தெடுத்த கயவர்களின் கவனத்திற்கு kontu சென்றாலும் அவர்கள் அதில் அவர்கள் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். ஏன் என்றால் வெளிநாட்டு காரர்கள் கொடுக்கும் லஞ்ச பணம் தின்னும் பேய்களாக மாறிவிட்டார்கள்,இனி நாம் தான் விழித்துக்கொண்டு நம் சந்ததியை பாதுகாக்க நம்மாழ்வார் போன்றோரின் அறிவுரையை நடைமுறை படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை