Yet another DMDK MLA met Jayalalithaa | முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சந்தித்ததால் பரபரப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சந்தித்ததால் பரபரப்பு

Added : பிப் 28, 2013 | கருத்துகள் (103)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Yet another DMDK MLA met Jayalalithaa முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சந்தித்ததால் பரபரப்பு

சென்னை: தே.மு.தி.க., வைச் சேர்ந்த, செங்கம் தொகுதி, எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், தொகுதி பிரச்னை தொடர்பாக மனு அளித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம், புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு என, பல பரபரப்புகள் அரங்கேறி வந்த நிலையில், சப்தமில்லாமல் ஒரு சந்திப்பும், நேற்று தலைமைச் செயலகத்தில் அரங்கேறியது. தே.மு.தி.க.,வின், எம்.எல்.ஏ.,க்களான, சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் மற்றும் தமிழழகன் ஆகிய நால்வர் ஏற்கனவே, முதல்வரை சந்தித்து, அணிமாறிய நிலையில், ஐந்தாவதாக, செங்கம் தொகுதி, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., வான, சுரேஷ்குமார், நேற்று பகல், 12:00 மணிக்கு, முதல்வரை சந்தித்து, தொகுதி தொடர்பான கோரிக்கை மனு அளித்தார். பின், நிருபர்களிடம் சுரேஷ்குமார் கூறுகையில், ""காவிரி நதிநீர் பிரச்னையில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு விவகாரத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, யாரும் செய்ய முடியாத, ஒரு சாதனையை செய்ததற்காக, முதல்வரை பாராட்டி நன்றி தெரிவித்தேன். செங்கம் தொகுதி பிரச்னை பற்றி பேசியுள்ளேன். அது தொடர்பாக, மனுவும் அளித்துள்ளேன்,'' என்றார். இந்நிலையில், இவரை தவிர, தே.மு.தி.க., வில் இருந்து இன்னும், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Peria Samy - chennai,இந்தியா
02-மார்-201300:04:45 IST Report Abuse
Peria Samy யாரை நம்பி நான் இருக்கேன் போங்கடா போங்க,என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
01-மார்-201323:13:42 IST Report Abuse
GUNAVENDHAN விஜயகாந்த்தால் சட்டமன்ற தேர்தலின் போது கட்சி சார்பில் போட்டியிட சீட் மட்டும் தான் கொடுக்கமுடியுமே ஒழிய அவரால் அவரது கட்சி வேட்பாளர்களை தேர்தலில் ஜெயிக்க வைக்க முடியாது என்பதை அவர் கட்சி சார்பில் நின்ற அனைவருமே புரிந்துகொண்டார்கள் என கருதுகிறேன். ஜெயலலிதாவின் வோட்டுவங்கியால் தான் நாமெல்லாம் ஜெயித்தோம் என்றும் அவர்கள் நன்கு புரிந்துகொண்டதால் தான் இந்த நிலை. அதற்க்கு முன் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு , ஒரெஒருவர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றதையும், மற்ற எல்லோரும் மண்ணை கவ்வியதையும் விஜயகாந்த் வேண்டுமானால் மறந்துவிட்டு இருக்கலாம், ஆனால் இவர்களால் அதையெல்லாம் மறக்கத்தான் முடியுமா?. அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த்துடன் மட்டும் ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நிற்காமல், அவரது மனைவி , மச்சான் இவர்களது அலப்பரையை தாங்கிக்கொள்ளமுடியாமல் ஏராளமானோர் அங்கு புழுங்கிகொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஒன்றுமே இல்லாதபோதே இப்படி குடும்பமே தங்களை ஆட்டிபடைக்கின்றதென்றால், தப்பித்தவறி கொஞ்சம் பவர் ஏதாவது கிடைத்துவிட்டால் இன்னமும் தங்களை கசக்கிபிழிவார்கள் என்று அலறுகிறார்கள் போலிருக்கின்றது. விட்டால் போதும் என்று அங்கிருந்து வெளியேறவே நிறைய பேர் முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது. விஜயகாந்த்துக்கும் அவரது மனைவி, மச்சான் ஆஅகியொருக்கெல்லாம் அரசியல் பாடம் நடத்தி , அரசியல் என்றால் என்ன என்று புரியவைத்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் சமீப காலமாக அவர்கள் போக்கில் பெரிய மாற்றம் தெரியவருவதால் மிகவும் மனம் நொந்து தான் வேறு வழியில்லாமல் அங்கு இருக்கின்றார் என்கிறார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனை சீண்டினால் நம் பொழப்பு நாறிபோய்விடும் என்பது உணர்ந்ததால் விஜயகாந்த்தும் அவர் விஷயத்தில் மட்டும் தன் மனைவி, மச்சான் சொல்வதை கேட்காமல் அவரிடம் அனுசரணையாக இருப்பதாகவும் தெரிகின்றது. கிடைத்த நல்ல வாய்ப்பை தேர்தல் முடிந்த கையேடு , ஜெயலலிதாவை பகைத்துகொண்டதால் கெடுத்துக்கொண்டாகிவிட்டது. ஜெயலலிதாவாவது தாராளமாக சீட்டுகளை ஒதுக்கி கொடுப்பது மட்டுமல்லாது, தன் கட்சி - அடுத்த கட்சி என்கிற பாகுபாடு பார்க்காமல் வெற்றிபெற வைப்பார். கருணாநிதியிடம் பிகு பண்ணி சீட்டுகளை அதிகமாக பெற்றாலும், தன் கட்சி மாவட்ட செயலாளர்கள் மூலமாக சமாதி அல்லவா கட்ட பார்ப்பார். கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்தவர்கள் கதியை நினைத்து கொஞ்சம் கலங்கினாலும், விஜயகாந்த்துக்கு இப்போதைக்கு வேறு வழியும் இல்லை. கருணாநிதியுடன் தான் கூட்டு சேரமுடியும், அப்படி கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்தாலும் அதை எதிர்த்து கட்சியைவிட்டு சிலர் விலகவும் வாய்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது. விஜயகாந்த் இனியாவது விவேகமாக முடிவெடுத்தால் தான் கட்சியை காப்பாற்றமுடியும். என்ன செய்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
meekannan - Chennai,இந்தியா
01-மார்-201317:41:48 IST Report Abuse
meekannan எத்தனை கேசு போடுங்க இனிமே ஜெயிக்கவே முடியாதுன்னு தெரிஞ்சும் திமுக காரன் ஒருத்தன் கூட அங்கே போகமாட்டேன்கிரானே?
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
01-மார்-201317:30:56 IST Report Abuse
Yoga Kannan ஒரு முதலமைச்சரை சந்திப்பது தவறில்லை....பச்சை புல்லை காட்டி பசு கூட்டத்தை பிரித்த பஞ்ச தந்திர கதையை எல்லோரும் படித்து இருப்பீர்கள்..... வினை விதைத்தவன் வினை அறுப்பான் .... கூட நடப்பின் பலனை இப்போது திரு காப்டன் அறிவார் என்று நினைக்கின்றேன்...
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
01-மார்-201317:08:02 IST Report Abuse
K.vijayaragavan சுபம் சீக்கிரம். எவ்வளவு விரைவில் மற்ற எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு வருகிறார்களோ அவ்வளவுக்கு அந்தந்த தொகுதி மக்களுக்கு நல்லது. அது மட்டுமல்ல விஜயராஜ் கூடாரம் விரைவில் காலியானால் அது தமிழக அரசியலுக்கு நல்லது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாசகார காங்கிரசிடம் பெட்டி வாங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிடுவார் இந்தாள். ராமதாஸ், வைகோ போல் இந்தாளும் அரசியல் அனாதையாவது அரசியலுக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
rajan - thane,இந்தியா
01-மார்-201316:52:59 IST Report Abuse
rajan கருத்து கண்ணாயீரங்களா இதுல எத்தனைபேர் போன தேர்தலில் ஒட்டு போட்டிங்க ,vanthuddaanuga கருத்து சொல்ல
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
01-மார்-201315:39:15 IST Report Abuse
Rangarajan Pg அப்பப்பா பயங்கர பரபரப்பு ஏற்பட்டு விட்டது. புழுதி பறக்கிறது. தாங்க முடியவில்லை இந்த பரபரப்பு..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-மார்-201315:38:38 IST Report Abuse
Nallavan Nallavan அதிமுகவினரும் டெண்டர் எடுத்தல் போன்றவற்றில் "சாதனை" செய்து வருகின்றனர் ... இரு கழகங்களும் ஒன்றுக்கு மற்றதே தேவலாம் என்ற என்னத்தை மக்களிடம் மாறி ... மாறி விதைத்து வருகின்றன .... என்றுதான் நமக்கு விடியுமோ ????
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
01-மார்-201315:38:22 IST Report Abuse
Rangarajan Pg தமிழ்நாட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எல்லாமே பரபரப்பு தான். அரசியல்வாதிகள் எல்லோருமே பரபரப்பு விரும்பும் பேர்வழிகள் தான். இப்படி இருக்கும்போது பரபரப்புக்கா பஞ்சம்? இதோ இந்த செங்கம் தொகுதி எம்.எல். எ. இருக்கும் இடம் தெரியாமல் பெயர் கூட வெளியே தெரியாமல் இருந்தார். எவ்வளவு நாள் தான் அப்படி இருப்பது? முதல்வரை சந்தித்தால் அதை வைத்து ஒரு PUBLICITY கிடைக்கும். பரபரப்பு ஏற்படும். கட்சிக்குள் இவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். சொல்ல முடியாது இவர் ஓடி போய் விடகூடாது என்று ஒரு செக்யூரிட்டி ஆளை நியமித்தாலும் ஆச்சர்யமில்லை. இவ்வளவு ADVANTAGE இருக்கபோகும் இந்த சந்திப்பை நிகழ்த்தினால் என்ன என்ற நினைப்பினால் நிகழ்ந்த சந்திப்போ?
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
01-மார்-201315:20:13 IST Report Abuse
T.C.MAHENDRAN போகிறபோக்கில் தே.மு.தி.க.கட்சியே ""கிளீன் போல்ட்"" ஆனாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை