Salem university shocked about fake bill by professor | இல்லாத கடை பெயரில் போலி "பில்': பேராசிரியரின் நடவடிக்கையால் பல்கலை., அதிர்ச்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இல்லாத கடை பெயரில் போலி "பில்': பேராசிரியரின் நடவடிக்கையால் பல்கலை., அதிர்ச்சி

Added : பிப் 28, 2013 | கருத்துகள் (37)
Advertisement
Salem university shocked about fake bill by professor இல்லாத கடை பெயரில் போலி "பில்': பேராசிரியரின் நடவடிக்கையால் பல்கலை., அதிர்ச்சி

சேலம்: சேலம் பெரியார் பல்கலை, இயற்பியல் துறைத் தலைவர், பல ஆண்டுகளாக, சமர்ப்பித்த, "பில்'களில் உள்ள முகவரியில், கடையே இல்லாததது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பேராசிரியரே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது, பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை, இயற்பியல் துறைத் தலைவராக இருப்பவர் பேராசிரியர் கிருஷ்ணகுமார். இவர், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது அலுவலகத்தில், நேற்று முன்தினம், விஜிலென்ஸ் போலீசார் திடீர் ரெய்டு நடத்தி, போலி பில் குறித்து, விசாரணையும் செய்தனர். இதில் ஸ்டேஷனரி வாங்கியதாக வைக்கப்பட்டுள்ள பில்களில் பெரும்பாலானவை, "ஜோதி பேப்பர் மார்ட் அண்டு ஸ்டேஷனரீஸ்' என்ற பெயரில் உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, டி.என்.ஜி.எஸ்.டி., நெம்பர் மற்றும் தொலைபேசி எண்கள், வேறு கடைக்கும், வீட்டுக்கும் சொந்தமானவை என்பதும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள கருங்கல்பட்டி, அசோக் நகர், 18ம் எண் கொண்ட முகவரியில், வீடுகள் மட்டுமே உள்ளன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பில்களில் காணப்படும் தேதி முரண்பாடும், இவை போலி பில்கள் என காட்டிக் கொடுக்கின்றன. போலி பில் புத்தகம் அச்சடித்து, தேவைக்கேற்ப பில்களை சமர்ப்பித்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் ஆய்வு சம்பந்தமாக வெளி மாநிலம் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் செலவுகளை, "யு.ஜி.சி.,' உள்ளிட்ட ஆய்வு மையங்களிடமும், அதே பில்களை கொண்டு, பெரியார் பல்கலையில் என, இரு முறை க்ளெய்ம் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்கலை துறை தலைவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்குள், பர்னிச்சர்களை வாங்கிக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் முத்துச்செழியன், தமிழக அரசு நிறுவனமான டான்ஸி மற்றும் எல்காட்டில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்ட நிலையிலும், 50 ஆயிரத்துக்குள் வருமாறு, தனித்தனியே பில்களை பிரித்து, சொந்த ஊரான திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பல லட்ச ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. ஜோதி பேப்பர் மார்ட் முகவரியிட்ட பில்களை பல பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பேராசிரியரே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது, பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் கூறுகையில், ""தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், போலீஸ் அறிக்கை கிடைத்தவுடன், சட்டப்படியும், பல்கலை விதிப்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Bangalore,இந்தியா
01-மார்-201316:18:40 IST Report Abuse
Tamilan என்னாது கடைய காணோமா,,,,,,,
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-மார்-201314:48:19 IST Report Abuse
Nallavan Nallavan ஊழல் ... முறைகேடு என்பது சராசரி இந்தியன் ரத்தத்தில் அதுவும் ரத்த அணுக்களில் .... ரத்த நாளங்களில் ஊறியது .... நீங்காக் கறையாகப் படிந்தது ..... இதுக்கு வாக்ஸின் (தடுப்பு ஊசி) கண்டு பிடிச்சு அதைக் கட்டாயமாக்கினாக் கூட அதைப் போட்டுக்காம இருக்கறதுக்கு அல்லது தப்பிக்கிறதுக்கு "பேரம்" பேசுவான் சராசரி இந்தியன் ... ம்ம்ம்ஹூம் ... சான்சே இல்ல ..... சாரி ....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-மார்-201314:45:26 IST Report Abuse
Nallavan Nallavan முன்பு மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக காட்டி கோடிக்கணக்கில் பணம் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .... இம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் ரோல்பட்டியலில் அதிகரித்து காட்டப்பட்டு அதற்கான பண உதவியும் பெற்றுள்ளனர். இவ்வாறு நடந்த ஊழல் தொடர்பான சோதனையில் நந்தடு மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 500 பள்ளிகளில் 7 லட்சம் மாணவர்கள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் போலியானவர்கள் என்றும் தெரியவந்தது .... இந்த வகையில் முறைகேடு தொகை ஆயிரம் கோடியை எட்டும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது ....சோதனை நடந்தபோது காலையில் இருந்த மாணவர்கள் மதியம் மாற்று பள்ளியில் கணக்கிற்காக காட்டப்பட்டுள்ளனர் இதை மஸ்டர் ரோல் ஊழல் என நாற்பது வருடத்திற்கு முன்பே செய்து இந்தியாவிற்கே வழிகாட்டியவர்கள் தமிழர்கள் .... அதை மற்றவர்கள் கற்றுக்கொள்ள நாற்பது வருடங்கள் ஆகியுள்ளன என்பதை பார்க்கும் போது தமிழர்கள் அறிவுத்திறம் என்னே .... என்னே ....
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
01-மார்-201314:39:38 IST Report Abuse
adithyan அந்த பல்கலை கழகமே போலி. அதில் நடத்தப்படும் பரிட்சைகள் போலி. தரப்படும் பட்டங்கள் போலி. மதிப்பெண்கள் பட்டியல் போலி. அந்த பல்கலை கழக துணை வேந்தர் பேரிலேயே ஒரு கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். அங்கெ நிரந்தர ஊழியர்கள் கிடையாது. "கவனித்தால்" மதிப்பெண் பட்டியலில் அதிகம் மதிப்பெண் போட்டு தருவார்கள் என்பது சேலத்தில் உள்ளவர்கள் அனைவருக்க்மே தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-மார்-201314:38:28 IST Report Abuse
Nallavan Nallavan மஸ்டர் ரோல் ஊழல் என்பது சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகம் கண்ட முதல் பிரபலமான ஊழல் ... சென்னை கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட ஊழல் அது .... அக்காலத்தில் ( எழுபதுகளில் ) மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது .... மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார் .... தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான் .... லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது .... ஆனால் அதை மறைத்து .... பயந்துகொண்டே வாங்கினார்கள் .... அதை சாதரண விஷயமாக்கியது கட்டுமரம்தான் ....
Rate this:
Share this comment
Cancel
KANNAN - CHENNAI,இந்தியா
01-மார்-201313:44:12 IST Report Abuse
KANNAN இந்த நடைமுறை எல்லா இடத்திலும் நடை பெற்றுகொண்டிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
01-மார்-201313:38:33 IST Report Abuse
Snake Babu எல்லா இடங்களிலும் இது சகஜமா நடந்துக்கிட்டு தான் இருக்கு. மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள் இந்த மாதிரி ஊழல்களினால் சரியாக போய் சேருவதில்லை. இது ஊருக்கே தெரிந்த ரகசியம். யாரையாவது பிடிக்கலேன்னா இந்த மாதிரி போட்டுகொடுத்து மாடிவிட்டுற்றது. நல்ல ஒரு நிர்வாகத்தை குலைக்கும் கரையான்கள் இது போன்ற ஊழல்கள். இப்படியாவது குரைத்தா நல்லா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
gans - seoul,தென் கொரியா
01-மார்-201313:23:31 IST Report Abuse
gans இவன் ஒருத்தன் மாட்டியிருக்கான். இவன மாதிரி எத்தனை பேர் மடம் சுத்திகினு இருக்கானுங்க அண்ணா பல்கலை கழகத்தில, ஒருத்தன் என்னன்னா பொண்ணுகள ஊட்டுக்கு கூப்பிடுரான். அவனே பசங்க இருக்கும்போதே பொண்ணுகளோட ( அந்தமாதிரி ) ஆய்வகத்தில கூத்தடிக்கிரான் ( ஆய்வு கட்டுரை எழுதி தரேன்னு சொல்லிகிட்டு ) நாடு கெட்டு போனதே இந்த மாதிரி பொறுக்கிகளால்தான்.
Rate this:
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
01-மார்-201312:26:26 IST Report Abuse
Linux இந்த வாத்திகளுக்கும் நம்ம பசி("பட்ஜெட் சிகாமணி") க்கும் வித்தியாசம் தெரியல...
Rate this:
Share this comment
Cancel
Sanghimangi - Mumbai,இந்தியா
01-மார்-201311:13:50 IST Report Abuse
Sanghimangi பசங்களை என்ன பாடு படுத்தி இருப்பாரோ இந்த பேராசிரியர்... அதுதான், விவரமான மாணவன் போட்டு கொடுத்து விட்டான் என நினைக்கிறேன்... என்ன கொடுமை என்றால், கூட்டத்தில் கோவிந்தா போடுவது போல, மற்ற பேராசிரியர்கள் இதை கண்டிப்பதை விட்டு விட்டு அவர்களும் முறைகேடு செய்து இருப்பதுதான்... பின் குறிப்பு: பொதுவாக வெளியூர் செல்வதற்கு அரசு வழங்கும் பயண படிகளும், பஞ்ச படிகளும் உண்மை சூழலுக்கு முற்றிலும் ஒத்துவராத முறையில் மிக குறைவாக வழங்கப்படுகிறது. அதை பரிசீலித்து வெளி பயணங்களுக்கு வழங்கப்படும் பணத்தை உயர்த்த வேண்டும். பெரும்பாலும் நியாமான ஊழியர்கள் தங்கள் கைக்காசை அதிகம் செலவழிக்கும் நிலையே இருக்கிறது. இது மாற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை