புதுடில்லி: "எம்.பி.,க்கள் யாருடைய தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படவில்லை; அதிகாரபூர்வமற்ற முறையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், அருண் ஜெட்லியின் தொலைபேசி பதிவுகள் கோரப்பட்டது தொடர்பாக, விசாரிக்கப் படுகிறது. அதுபற்றி, முழு தகவல்கள் பெறப்படும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்தது.
எதிர்க்கட்சி தலைவர்களின், தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக, ராஜ்யசபாவில், நேற்று பிரச்னை வெடித்தது. பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அ.தி.மு.க., போன்ற கட்சிகளின் எம்.பி.,க்கள், இந்த பிரச்னையை எழுப்பி, ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். "ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், அருண் ஜெட்லியின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது ஏன்?' என, ராஜ்யசபாவில், பா.ஜ., உறுப்பினர், வெங்கையா நாயுடு பிரச்னை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: அருண் ஜெட்லியின் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது; இது, கண்டிக்கத்தக்கது. இதேபோல், பலரின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இதற்கு உத்தரவு போடுவது யார்? இது பற்றி, உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பொதுவாக இதுபற்றிய விவகாரம் எழும்போது, அரசு மீது தான் சந்தேகம் கிளம்பும். அரசின் அனுமதியில்லாமல், இதுபோன்ற விவகாரம் எப்படி கிளம்புகிறது; போன் ஒட்டு கேட்பு நடந்ததா என்பது பற்றி, அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு வெங்கையா கூறினார்.
இடதுசாரி கட்சிகள் சார்பில், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் பேசினர். சீதாராம் யெச்சூரி பேசுகையில், ""100க்கும் மேற்பட்டோரின், தொலைபேசிகள் ஓட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இதில், என் பெயரும் உள்ளது,'' என்றார். சமாஜ்வாதி உறுப்பினர், ராம்கோபால் யாதவ் பேசுகையில், ""ராஜ்யசபா தலைவர் உட்பட சில முக்கிய தலைவர்களின், தொலைபேசி பதிவு விவரங்களை ஒரு போலீஸ்காரர் கேட்டுள்ளார். இதன் பின்னால், என்ன நடக்கிறது. 100 தலைவர்களின் தொலைபேசி தகவல்கள் பெற்றதில், இரு சபைகளை சேர்ந்த தலைவர்கள் உள்ளனரா? தகவல்களை பெறும் முன், சம்பந்தப்பட்ட சபையின் தலைவர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.
அ.தி.மு.க., உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில், ""இரண்டு விதமாக, தொலைபேசி ஒட்டுக் கேட்பு நடக்கிறது. ஒன்று, அரசு சார்பில் நடக்கிறது; மற்றொன்று, கம்பெனிகளுக்காக, ஒட்டு கேட்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. எதிர்க்கட்சிகளை சேர்ந்த, உறுப்பினர்களின் யார் யாராது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது என்பது பற்றி வெளியிட வேண்டும்,'' என்றார் இந்த விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சர், விளக்கம் அளிக்க வேண்டும் என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே விளக்கம் அளித்து, பேசுகையில் கூறியதாவது: ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், அருண் ஜெட்லியின் தொலைபேசியை இடைமறித்து கேட்க யாரையும் அரசு நியமிக்கவில்லை. இந்த விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை. எந்த உறுப்பினரின் தொலைபேசியையும், ஒட்டு கேட்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. தொலைபேசி பதிவு தகவல்களை பெறுவற்கு முயற்சி நடந்தது. டில்லி போலீசாரின் ஒரு வழக்கு விசாரணைக்காக, போலீஸ்காரர் அரவிந்த் குமார் தபஸ் என்பவர், 100க்கும் மேற்பட்ட தொலைபேசி பதிவு விவரங்களை கேட்டுள்ளார். அதிகாரபூர்வமற்ற முறையில், இந்த முயற்சி மேற்கொள்ளபட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் முழு விவரம் வெளியிடப்படும். எதிர்க்கட்சி தலைவர் சாதாரண மனிதர் அல்ல. நாங்கள் கடைசி வரை சென்று, விசாரணை நடத்தி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிக்கை தாக்கல் செய்து விடுவோம். இதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. இவ்வாறு, ஷிண்டே கூறினார்.
ஒற்றர்கள் நியமனம்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒட்டு கேட்பது அரசின் சாணக்கியத்தனம். ஒவ்வொரு அரசும் நாட்டில் என்ன நிலவுகிறது என்று தெரிந்து கொள்ள ஒட்டு கேட்பது சகஜம்தான். அந்த காலத்தில் மன்னர்கள் மாறுவேஷத்தில் சென்று வருவதில்லையா? அதுபோன்று தான். இதே எதிர்கட்சிகள் நாளை பதவிக்கு வந்தால், இவர்களும் ஒட்டு கேட்பார்களே. இதை பெரிதாக எடுத்துகொள்ள தேவை இல்லை. எதிர்கட்சிகளின் சதி வேலையை முறியடிக்க, ஒட்டுகேட்பது அவசியம். நாட்டில் கலவரம் இல்லாமல் இருக்க, அமைதி நிலவ ஒட்டுகேட்பது அவசியம்தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.