திருப்பூர்: "காஸ் குழாய் அமைக்கும் பணி குறித்து, ஐகோர்ட் உத்தரவுக்கு ஏற்ப, விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படும்' என்ற முதல்வரின் உத்தரவுக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். திருப்பூர் அருகே விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள "கெய்ல்' நிறுவனம், கேரள மாநிலம் கொச்சினில் இருந்து, பெங்களூரூ வரை, நிலத்தடியில் குழாய் பதித்து, காஸ் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 318 கி.மீ., தூரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக இக்குழாய் பதிக்கப்படுகிறது. இப்பணிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மாற்றுப்பாதை குறித்து "கெய்ல்' நிறுவனம் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஐகோர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், இப்பணிக்கு கோர்ட் மூன்று வாரம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது. விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், வரும் 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்ட பின், துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தனது தலைமையில் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஐகோர்ட் தடையுத்தரவு மற்றும் முதல்வரின் உத்தரவுகளால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை கொண்டாடும் வகையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொங்கல் கொண்டாட்டம்:
திருப்பூர் மாவட்ட எல்லையான ஊத்துக்குளியை அடுத்த முல்லைநாயக்கனூர் பகுதியில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், விவசாய நிலங்களில் மரங்கள், பயிர்கள் அழிக்கப்பட்டு, குழி தோண்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் நிலம் சமன் செய்யப்பட்டு குழாய் பதிக்கும் பணி துவங்கியுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்திய இதே நிலத்தில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஏராளமான விவசாயிகள் நேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். தங்களை வாழ வைக்கும் பூமித்தாய்க்கு பொங்கலை, படையல் வைத்து வழிபட்டனர். இதில், சுற்றுபபகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறுகையில், "எங்கள் எதிர்ப்பை மீறி, மாவட்ட எல்லையில் "கெய்ல்' நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை சிறிது சிறிதாக செய்துள்ளது. ஐகோர்ட் உத்தரவு மற்றும் முதல்வரின் அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் எங்கள் கருத்தை முழுமையாக விளக்குவோம். இத்திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், மாற்றுவழி குறித்தும் கெய்ல் நிறுவனம் ஆலோசிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த ஒரு திட்டமும் விவசாயிகள் நிலம், மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலேயே நடத்துவது அழிவுக்குத்தான் வழிவகுக்கும். ஏற்கனவே நீரில்லாமல் விவசாய நிலங்கள் தரிசாக போகிறது. எங்கும் அதிகார துஷ்ப்ரயோகம் தான். தமிழக விவசாயிகள் ஏமாளிகள் என்ன வேணுமானாலும் செய்யலாம் என்றால் புரட்சித்தான் வெடிக்கும். அம்மாவின் அறிவிப்பு தற்காலிக ஆறுதல் தான். இருந்தாலும் நன்றி , நன்றி .
விவசாய நிலங்கள் கண்டிப்பா பாதுகாக்கப்பட வேண்டிய விஷயமாகும். அதுபோல் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் விவசாயிகளின் பலவீனத்தை பணம் இன்மையை குறி வைத்து... எங்கெங்கோ வியாபாரம் செய்கின்றனர்.. இதை ஜெயா அரசு தடுக்க வேண்டும்.. மனம் வலிக்கிறது.. அடுத்த தலைமுறை உணவுக்கு எங்கே செல்லும்.... அமெரிக்காவில் விவசாய நிலங்கள்.. காடுகள் பாதுகாக்க படுகின்றன... தேவை இல்லாமல் ரியல் எஸ்டேட் வியாபாரம் அதிக அளவில் பெருகு கிறது... இவ்வளவு விளை நிலங்களை எப்படி விற்கின்றனர்... இதற்க்கு கிராம நிர்வாக அலுவலர்களே காரணம்.. இவர்களை விசாரிக்க வேண்டும்... இவர்களை விசாரிக்கு உட்படுத்த வேண்டும்...
கடைசி நேரத்தில் வந்து இந்த ஆட்சி விவசாயிகளுக்கு சாதகமாய் நடந்து கொண்டது விவேகமானது, இதை முன்னமே செய்திருக்க வேண்டும், எவ்வளவு விவசாய நிலங்கள், தரமற்ற அதிகாரிகளின் நடத்தையால் இது போன்ற குற்றங்கள்(விவசாய நிலஅபகரிப்பு) நிகழ்கின்றன, இது போன்ற அபகரிப்புகள் கருநாடக ரெட்டி சகோதரர்கள் செய்த திருடை விட கொடுமையானது, அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்குமா?
"Agriculture is the backbone of the Indian Economy"- said Mahatma Gandhi five decades ago.
"விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு" ஐம்பது வருடங்கள் முன்பு நமது தேச தந்தை சொன்னது, ஆனால் இன்றைய நிலையில் விவசாய்கள் முதுகு எலும்பை உடைத்து, இந்த கெய்ல் நிறுவனம் காஸ் குழாய்களை பதிக்க முயல்கிறது. விவசாய்கள் நாங்கள் யாரும் இந்த கொச்சின்-பெங்களூர் காஸ் திட்டத்தை எதிர்கவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்கு இது போன்ற திட்டங்கள் தேவை. ஆனால் இந்த திட்டத்தை விவசாய்கள் நிலத்தை கூறு போட்டு செயல் படுத்த எதிர்க்கிறோம். இந்த காஸ் குழாய் பதிக்க 65 - 70 அடி(Feet) அகலம் தோண்டி, 6 அடி (Feet) கீழ் பதிக்கிறார்கள். இதை செய்த பின்பு அந்த இடத்தில் விவசாயம் செய்ய சொல்கிறார்கள். காஸ் பதித்த இடத்திலோ, அருகிலோ (சுமார் 100 அடி - இரு புறமும், அதாவது சுமார் 200 அடி) மரம் நடகூடது, தண்ணீர் தொட்டி இருக்ககூடாது, நிலத்தை தோண்ட கூடாது, கட்டடம் கட்ட கூடாது..... எதையும் செய்யக் கூடாது. சும்மா நிலத்தை வைத்து பார்த்துகொண்டு மண்ணை திங்க சொல்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம். ஆனால் இதே திட்டதை தேசிய நெடுஞ்சாலை (National Highways) வழியாக செயல்படுத்தினால் யாருக்கும் துன்பமில்லை, விவசாய நிலங்கள் பாதுகாகபடும். வெளிநாட்டில் அணைத்து காஸ் குழாய்களும் சாலை வழியாகத்தான் செல்கின்றன. அங்கே விவசாய நிலங்கள் பாதுகாக்கபடுகின்றன. ஆனால் இங்கு அனைவரும் எங்களை ஏமாற்றுகிறார்கள். ஏற்கவே பாதி விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்று சொல்லி பிளாட் போட்டு விற்று விட்டார்கள். மழை இல்லை, தண்ணீர் இல்லை, உரம் இல்லை, பணம் இல்லை.... விலைவாசி நாளுக்கு நாள் ஏறி கொண்டே போகிறது. இந்த நிலையல் கெய்ல் நிறுவமும் எண்களின் நிலங்களை கூறு போட்டு எங்களின் கண்களில் ரத்தம் சிந்தவைகிரார்கள். இதே நிலை தொடரந்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வைதை தவிர வேறு வழி இல்லை. தயவு செய்து இந்த கொச்சின்-பெங்களூர் காஸ் குழாய் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செயல் படுத்த வேண்டும். விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டும். எங்களை வாழவிடுங்கள்.
கர்நாடகத்து காஸ் கொடுக்க தமிழ் நாட்டு விவசாய்களின் நிலங்களை கூறு போடுவதா என்று சிலர் அரசியல் ஆக்க பார்க்கிறார்கள். தயவு செய்து இதை அரசியல் ஆக்க வேண்டாம். நாம் எல்லோரும் இந்தியர்கள். இன்று தமிழ் நாடு வழியாக கர்நாடகத்திற்கு காஸ் குழாய் செல்கிறது. நாளை அதுபோல் கர்நாடகத்திலிருந்து நமக்கு காஸ் குழாய் பதிக்கலாம். ஆனால் இதை விவசாய நிலங்கள் பாதிக்க படாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல் படுத்த வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
தயவு செய்து எங்களை காப்பற்றுங்கள்
இப்படிக்கு,
உங்கள் விவசாயி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.