நாடு முழுவதிலும் கைவரிசை காட்டிய "பந்தி சோர்': விமானத்தில் மட்டுமே "பறப்பாராம்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை: கேரளாவில் பிடிபட்ட வடமாநில, "நகை பறிப்பு' ஆசாமி குறித்து பல, "பகீர்' தகவல் வெளியாகியுள்ளன. டில்லி, சாரங்நகர் பகுதியைச் சேர்ந்தவன் தேவேந்திரசிங், 40. கோவை, கேரளாவில் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன், கடந்த ஜன., 29ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டான். நாடு முழுவதிலும் இவன் மீது 200க்கும் மேற்பட்ட குற்ற பின்னணி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவனை நேற்று முன்தினம் கோவை ஜே.எம்.எண்:6 கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், இரண்டு நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் "கைவரிசை' காட்டிய தேவேந்திரசிங், கடந்த 1992ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேவேந்திரசிங் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவன். அங்கிருந்து டெல்லிக்கு சென்று பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். டெல்லி போலீசார் மற்றும் பொதுமக்கள் இவனை "பந்தி சோர்' என்றே அழைப்பார்கள். "பந்தி சோர்' என்றால் ஹிந்தியில் மிகப்பெரிய திருடன் என்று அர்த்தம். டெல்லியில் மட்டும் இவன் மீது 200க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. டெல்லியை தவிர மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் "கைவரிசை' காட்டியுள்ளான். ரோட்டில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன், பலமுறை போலீசில் பிடிபட்டு, பல்வேறு மாநில ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளான்; ஒன்பது முறை ஜெயிலில் இருந்து தப்பியுள்ளான். இவன் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவான். திடீரென அங்கிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்திலும் கைவரிசை காட்டுவான். போலீசில் சிக்க நேர்ந்தால், ஒதுக்குப்புற இடத்தில் கைவரிசை காட்டியதை மட்டும் தெரிவிப்பான். போலீசார் அவனை அந்த இடத்துக்கு அழைத்து செல்லும் போது, தப்பிப்பதற்காக இதுபோல் செய்து வந்துள்ளான். போலீசிடம் பலமுறை தப்பியுள்ள இவனுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட மனைவிகள் உள்ளனர்.
கடந்த 1992ம் ஆண்டு முதல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன், ரோட்டில் நிற்கும் கார்களை "அசால்டாக' திருடி, பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு, அந்த கார்களை வேறு பகுதிகளில் நிறுத்தி தப்பி விடுவான். சில மாதங்களாக கோவை, கேரளா பகுதிகளில் நடக்கும் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு போலீசில் சிக்காமல் தப்பி வந்தவன். ஜன., 14ம் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் புனிதவதி,59, என்பவர் மீது காரை மோதுவது போல் சென்று, தடுமாறி விழுந்தவரை தூக்குவதுபோல் நடித்து, 5 பவுன் செயினை பறித்து தப்பினான். சிறிது நேரத்தில், கே.என்.புரத்தில், ரங்கநாயகி,48, என்பவர் மீதும் அதே போல் நடித்து 5 பவுன் நகையை பறித்து தப்பினான். இந்நிலையில், ஜன., 29ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்டபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டான். கேரள போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கோவையில் நகை பறிப்பில் ஈடுபட்டு 10 பவுன் நகை பறித்ததை ஒப்புக்கொண்டான். தகவல் கிடைத்த பீளமேடு போலீசார் கேரளா விரைந்து, வழிப்பறி ஆசாமியை கோவை அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வாறு, அவர் கூறினார்.


விமானத்தில் மட்டுமே "பறப்பாராம்'

: "பந்தி சோர்' என்று அழைக்கப்படும் தேவேந்திரசிங் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிவிட்டு தப்பியுள்ளான். அவன், பஸ், ரயில் போன்று சாதாரணாமாக பயணம் செய்ய மாட்டானாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு விமானத்தில் மட்டுமே பறப்பாராம். பல்வேறு முறை போலீசில் சிக்கி, சாமர்த்தியாக தப்பியுள்ளான். கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அட்மிட் செய்யுங்கள் என, நீதிபதியிடன் கேட்டுள்ளான். கேரளா போலீசார் கோவைக்கு அழைத்து வரும்போது இவன் தப்பி விடாமல் இருக்க நான்கு ஏ.கே., 47 ரக துப்பாக்கிகளை உடன் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
02-மார்-201315:04:04 IST Report Abuse
Loganathan மீண்டும் பறக்காமல் இருப்பதற்காக இருபுறமும் நன்றாக இருக்க பிடித்து இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
02-மார்-201314:50:10 IST Report Abuse
Rajasekaran Palaniswamy இவ்வளவு பட்டங்களை வாரி வழங்கும் இந்திய காவல் துறைக்கும், நீதி துறைக்கும் நாங்கள் மிகவும் கடன் பட்டுள்ளோம். விரைவில் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் இடத்தில் சிலை வைக்கவும். இந்த முறையும் இவனுக்கு தண்டனை கிடைக்காது. அப்பிடியே கிடைத்தாலும் எப்படி தப்பிப்பது என்பது இவனுக்கு நன்றாகவே தெரியும். காந்திக்கு தலை வணங்காதவர்களே இந்த நாட்டில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Oosi - Port Said,எகிப்து
02-மார்-201314:17:24 IST Report Abuse
Oosi என்கவுண்டர் நாள் குறிக்க வேண்டியது தானே. இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரைக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
sumugan - bangalore,இந்தியா
02-மார்-201313:03:50 IST Report Abuse
sumugan "ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு விமானத்தில் மட்டுமே பறப்பாராம்" - இதிலிருந்து என்ன தெரிகிறது? ... விமான வழி காவல் துறை நிலைமை
Rate this:
Share this comment
Cancel
Kumaraswami Balasubramanian - erode ,இந்தியா
02-மார்-201312:47:11 IST Report Abuse
Kumaraswami Balasubramanian நிறைய பந்தி சோர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் பார்த்து பிடியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
unni krishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-மார்-201312:29:07 IST Report Abuse
unni krishnan பண்டி சோர் என்றல் வண்டி திருடன் என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
02-மார்-201311:57:59 IST Report Abuse
சகுனி வசதியான ஹைடெக் கொள்ளைக்காரன் போலிருக்கு ........ வாழ்வுதான் ....... இவனுக்கு ஜெயில்ல AC கிடைக்குமா? ........ காங்கிரஸ் கட்சியில சேர அத்தன தகுதியும் இவனுக்கு இருக்கு ........
Rate this:
Share this comment
Cancel
Gunasekaran - pudhucherry,இந்தியா
02-மார்-201310:42:27 IST Report Abuse
Gunasekaran கண்டிப்பாக தேசிய வீர தீர விருது கொடுத்து கவுரவிக்க வேண்டியது நம் கடமை...
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
02-மார்-201310:39:52 IST Report Abuse
kumaresan.m பெயரிலே "பந்தி சோர் . பின்ன எப்படி இருப்பான் ??? கலியுக கடவுள் போல இவன் கலியுக திருடன் " இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்திய சட்டத்தில் உள்ள தண்டனைகள் போதுமானது இல்லை என்று தெளிவாக தெரிகிறது ...சட்டத்தில் மாற்றம் வேண்டும் " ஒரு வேலை சாப்பாட்டுடன் ஒருமாதம் காலம் ஏர் உழுவ சொல்லுங்கள் பிறகு எப்படி திருடுவான் என்று பாப்போம் ???
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
02-மார்-201310:06:32 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இவனை திரு.வைகோவுடன் மது விலக்கு பிரச்சாரம் செய்ய நடை பயணமாக அனுப்பப் வேண்டும். வழியில் பச்ச தண்ணி கூட கொடுக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்