Heavy hundi collection in Stalin brithday celebration | ஸ்டாலின் மணி விழா கொண்டாட்டம்: உண்டியல் வசூல் அமோகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் மணி விழா கொண்டாட்டம்: உண்டியல் வசூல் அமோகம்

Updated : மார் 02, 2013 | Added : மார் 01, 2013 | கருத்துகள் (226)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Heavy hundi collection in Stalin brithday celebration

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழாவையொட்டி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தி.மு.க.,வினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியலில், தேர்தல் நிதி அமோகமாக வசூலானது.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழா, சென்னையில் உள்ள, அடையாறு ஓட்டலில், நேற்று நடந்தது. பட்டு வேட்டி, சட்டையுடன் ஸ்டாலினும், பட்டு புடவை அணிந்து, அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் ஸ்டாலினும், துர்காவும் மாலை மாற்றி கொண்டனர். பின், துர்கா கழுத்தில், ஸ்டாலின் தாலி கட்டினார். இருவரும் கருணாநிதி காலில் விழுந்து, ஆசி பெற்றனர். கருணாநிதி அவர்களுக்கு, அட்சதை போட்டு ஆசி வழங்கினார். பின்னர் ஸ்டாலின் கேக் வெட்டினார். விழாவில் அன்பழகன், ராஜாத்தி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். காலை, 10:00 மணிக்கு, ஸ்டாலின், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திற்கு வந்தார். அங்கு தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த மணி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஸ்டாலின் வயது குறிக்கும் வகையில், 60 கிலோ எடையுள்ள கேக்கை, தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் வெட்டினார். தொண்டர்கள் நீண்ட வரிசைகளில் நின்று, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் கூட்டத்தை சரியான முறையில் கட்டுப்படுத்தாத காரணத்தால், தள்ளு முள்ளு சம்பவம் அரங்கேறியது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் கீழே விழுந்து, எழுந்து சென்றனர். பூங்கொத்துகள், ஆளுயுர மாலைகள், சால்வைகள், பழத்தட்டுகள், ரூபாய் நோட்டு மாலைகள், "லவ் பேர்ட்ஸ்' போன்ற பரிசு பொருட்களை, ஸ்டாலினிடம், தி.மு.க.,வினர் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மணிவிழாவையொட்டி, மேடை அருகில் பெரிய உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதில், தொண்டர்கள் தேர்தல் நிதியாக பணத்தை செலுத்தி விட்டு சென்றனர். உண்டியலில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (226)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navasathishkumar - MADURAI,இந்தியா
04-மார்-201300:34:21 IST Report Abuse
navasathishkumar மொய் ...சடங்கிருக்கு சீர் கொண்டுவருவது போல வித வித பழ தட்டுக்கள் பொறந்தா அரசியல் வாதியா பொறக்கணும் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , செத்தாலும் ஆயிரம் பொன் ...60 வயது தந்தைக்கு என்ன பூரிப்பு , அழகிரி வந்தாரா ? மதுரை மாவட்ட தளபதி , தொண்டர்கள் எங்கே கலைஞர் கேட்கவில்லை , தேர்தல் வரட்டும் அழகிரியை அழைத்து sketch தருவார் பாவம் அவரும் சரியாய் செய்து கொடுத்து அட வடை போய்சே என்பது போல ஆக்கி விடுகின்றார்கள் இரண்டு கண்களுக்கு treatment கொடுக்க வேண்டும் , தமிழ்நாட்டில் இரண்டு முதல்வர்கள் jan _ஜூன், ஜுன் -டிசம்பர் அழகிரி , ஸ்டாலின் பிரித்து இந்திய தொலை sorry இந்திய அரசியல் வரலாற்றில் முதல் சாதனை படைக்க கலைஞர் உதவ வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
K.Sendhil Naathan - Chennai,இந்தியா
03-மார்-201300:33:11 IST Report Abuse
K.Sendhil Naathan மணி விழா என்றால் MONEY VIZHA & not MANI VIZHA. தோட்டத்து பிறந்த நாள் விழாவில் இதைவிட பெரும்தொகை சேர்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
s. selvaraj - coimbatore,இந்தியா
02-மார்-201317:21:40 IST Report Abuse
s. selvaraj வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
gopi - trichy,இந்தியா
02-மார்-201314:48:28 IST Report Abuse
gopi எது எப்படியோ ஸ்டாலின் தான் அடுத்த dmk தலைவர் .அதற்கு தமிழக மக்கள் சார்பாகவும் ஈழ தமிழர்கள் சார்பாகவும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள் .உங்கள் மேல் எம் இன மக்களுக்கு நம்பிக்கை வரும் படியாக உங்கள் பணி இருக்க வேண்டி மணிவிழ வாழ்த்து சொல்கிறோம் .இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை .தமிழ் மக்களை போலியாக இனி பார்க்காமல் உண்மையாக பார்த்தால் உங்கள் அரசியல் வெற்றிபெரும் .இல்லையானால் பெரியார்க்கு பிறகு கே.வீரமணி தலைமையில் திராவிட கழகம் சுருங்கியதை போல உங்கள் அமைப்பும் சுருங்கி தான் போகும் .சோ உண்மையாக பணியாற்றி பேரு பெருவிர்களாக
Rate this:
Share this comment
ரகு - chennai ,இந்தியா
03-மார்-201315:31:02 IST Report Abuse
ரகு ஈழ தமிழர்கள் சார்பாகவும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள் . ஈழத் தமிழர்கள் இழிச்ச வாயர்கள் என்று திமுக நினைத்தால் நிச்சயம் திமுகவை போல முட்டாள் வேறு யாராகவும் இருக்க முடியாது. ஈழ போரில் குடும்பத்துக்கு இருவராவது இறந்து இருப்பார்கள். பலர் இன்னமும் ஊனமுற்றவர்களாக விதவைகளாக அனாதைகளாக இருப்பதற்க்கு காரணம் காங்கரசுடன் துணை போன திமுக தான் திமுக தலைவர் தமிழர் பால் நிதானம் கொண்டு இருந்து இருந்தால் நிச்சயம் இத்தகைய அவல நிலை ஏற்பட்டு இருக்காது. ஈழத் தமிழர்களின் சாபம் நாளுக்கு நாள் திமுகாவை நிச்சயம் அழிக்கும். ...
Rate this:
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
02-மார்-201314:38:22 IST Report Abuse
JOHN SELVARAJ உண்டியல் வசூல் அமோகம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமோகம் என்றால் அது தி.மு.க கட்சித் தொண்டர்களின் உணர்வைக் காட்டுகிறது. இது ஒன்றும் கட்டாய வசூல் இல்லை. சிறிது நேரத்தில் வீணாகப் போகும் மாலைகளுக்குப் பதிலாக தொண்டர்கள் கட்சி நிதியாகத் தந்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
DAVID MC - CHENNAI,இந்தியா
02-மார்-201314:34:57 IST Report Abuse
DAVID MC மாலை, மரியாதைகளுக்குப் பதிலாக கட்சி நிதி பெற்றிருக்கிறார். கட்சிக்கு இவ்வாறு வெளிப்படையாக நிதி பெறுவது ஒன்றும் குற்றமில்லை. அதுவும் உணர்வுள்ள கட்சிக்காரர்கள் தாங்களாக அளிக்கும் நிதி அது.
Rate this:
Share this comment
ரகு - chennai ,இந்தியா
03-மார்-201315:34:31 IST Report Abuse
ரகு கட்சின்னா என்னா? இது குடும்பமே கட்சி கட்சியே குடும்பமாக இருக்கு. எனவே குடும்பத்துக்கு நிதி சேகரிப்பது சரியா? ...
Rate this:
Share this comment
Cancel
S.VENGATESAN (POR VAAL) - chennai,இந்தியா
02-மார்-201314:26:40 IST Report Abuse
S.VENGATESAN (POR VAAL) பகுத்தறிவு பாசறையில் புடம் போட்டு எடுத்த தங்கம், அட்சதை தூவி, மாலை மாற்றி, நெற்றியில் மங்கள திலகம் அணிவது எல்லாம் பகுத்தறிவின் எந்த பிரிவு சொல்வீரா??? வாழ்க ஊரை ஏமாற்றிய பகுத்தறிவு திலகங்கள்
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
02-மார்-201313:24:06 IST Report Abuse
Raja Singh இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றும் வழி மாக்கியவல்லி யின் வழி , ஓர் அரசன் தன் அதிகாரத்தை நிலைநாட்டவும் , அதை பெருக்கிகொள்வதற்கும் வஞ்சகம் ,சூழ்ச்சி ,பொய்மை ஆகியவற்றை ஈவு இரகமற்ற அடக்குமுறையுடன் இணைந்து கையாளவேண்டும் என்று 600 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் மாக்கியவல்லி. அவர் எழுதிய இளவரசன் என்ற புத்தகத்தில், ஆட்சியை பிடிக்க நினைக்கும் இளவரசன் , அறநெறிக்கொள்கைகளை அடியோடு புறக்கணித்து விடவேண்டும் . வலிமை , சூழ்ச்சி ஆகிய இரண்டை மட்டுமே முழுமையாக நம்பவேண்டும் என்று கூறி இருக்கிறார் . ஆட்சியை பிடித்ததும் ஓர் அரசன் எல்லா கொடுமைகளையும் உடனே செய்து முடித்துவிட வேண்டும் .குடிமக்களுக்கான நன்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்துதரவேண்டும் , என்று கூறி இருக்கிறார் . ஒரு மன்னன் அன்புக்கு ஆட்படவும் வேண்டும் ,அச்சத்தை விளைவிக்கவும் வேண்டும் . இரண்டில் எது நல்லது என்று கேட்டால் , அன்புக்கு அட்படுவதை விட அச்சத்தை விளைவிப்பதே பாதுகாப்பானது என்பது மாக்கியவல்லியின் வழிகாட்டுதல் . இவரது நூலை சர்வதிகாரத்துக்கு வழிகாட்டி என்பார்கள் . ஜனநாயகம் என்ற பெயரால் இங்கு நடப்பது அதுதானே -
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramaswamy - Jeddah,சவுதி அரேபியா
02-மார்-201313:04:26 IST Report Abuse
Muthu Ramaswamy இப்படியும் கொள்ளை...தேர்தல் நேரத்தில் 2g, 3g nu வந்த பணத்தை எல்லாம் செலவழிக்க வேண்டாமா? அதற்காக தான் வெளிப்படையாய் இருக்கட்டுமேன்னு தேர்தல் நிதி என்ற பெயரில் கொள்ளை நடக்கிறது...அதற்காகத்தான் சமீபத்தில் மத்திய அரசு பட்ஜெட்டில் நிதியில் வரும் பணத்திற்கு 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டது...யாரு கேட்க முடியாது...தேர்தல் பணம் எங்கிருந்து வந்தது என்று ....வாழ்த்த மனம் இல்லாமல், "பகைவரையும் பழிக்காதே" என்ற பொன்மொழிக்கேற்ப வாழ்க பல்லாண்டு...
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
02-மார்-201312:52:15 IST Report Abuse
Raja Singh அட்ரா சக்கை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை